ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

புகைபிடிப்போர் முதுமை அடைவதில்லை..??


ஆச்சரியமாக இருக்கிறதா....இக்கதையைப் படியுங்கள்....!!


மக்கள் அதிகம் கூடும் கடைத் தெருவில் ஒரு பெட்டிக்கடையிலே பெருங்கூட்டம் முண்டியடித்துக்கொண்டு நின்றது..!. இச்சிறிய பெட்டிகடையில் இவ்வளவு கூட்டமா..?. என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்க்காக நானும் அருகில் சென்றேன். அப்போது கடைக்காரன் " இது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அதி விஷேட 'சிகரட் ', இதைப் புகைத்தால் புகை இன்பம் மட்டுமல்ல இன்னும் பல நன்மைகள் இதிலுண்டு" என்று விளம்பரம் செய்துகொண்டிருந்தான். எனக்கோ ஆச்சரிய்ம் " அப்படி அதிலென்ன விஷேட நன்மைகள் உள்ளன..?" என்று கேட்டேன்


அதற்கவன் " இந்த சிகரட்டைப் புகைத்தால் வயோதிகம் வந்தணுகாது. இதை பாவிப்பவரின் வீட்டுக்கு திருடன் வரமாட்டான். இதைப்புகைத்தால் தெரு நாய்களின் தொல்லை இருக்காது.." என்று உருதிமொழியே கொடுத்தான்.


இதை கேட்டவுடன் "கையிருப்பு இல்லை" என்று கூறும் அளவுக்கு அமோக வியாபாரம் நடந்தது. உடனே எனக்கு கோபம் வந்து அந்த கடைக்காரனிடம் "ஏப்பா பொய்யான வாக்குருதி கொடுத்து வியாபாரம் செய்கிறாய், மக்களை ஏமாற்றுகிறாயா..?" என்று கண்டிப்புடன் கேட்டேன்.


அதற்கு அந்த கடைகாரன் சற்று சிரித்துக்கொண்டே "சார் நீங்க கோவப்படுகிற அளவுக்கு நான் பொய் சொல்லலியே, உன்மையைத் தானே சொன்னேன்..!!. அதாவது இந்த சிகரட்டை புகைத்தால் வயோதிகம் வராது என்றேன். ஏனென்றால் புகைப்பதால் நோய்வாய்ப்பட்டு புகை பிடிப்பவன் வயோதிகம் வரும் முன்பே இறந்துவிடுகிறான்.


இதை புகைப்பவன் வீட்டுக்குத் திருடன் வரமாட்டன் என்று சொன்னேன். ஏன் தெரியுமா..?. புகைப் பிடிப்பதால் எழும்புருக்கி நோய், மற்றும் இருமலினால் புகைப்பவன் இரவு பகல் என்று பாராமல் இருமிக்கொண்டே இருப்பான். வீட்டுக்காரன் விழித்துக்கொண்டிருக்கிறான் என நினைத்து திருடன் வரமாட்டான்.


புகைப்பிடிப்பவன் பலவீனமுற்று நடக்கச் சக்தியில்லாமல் விரைவில் கம்பு ஊண்டித்தான் நடக்க வேண்டிவரும். கையில் கம்போடு திரிபவனிடம் நாய்கள் நெருங்காதே..!. அதனால் தான் அவ்வாறு சொன்னேன்". என்று விளக்கம் சொன்னான்.


போட்டிபோட்டுக்கொண்டு வாங்கிய மக்கள் விழிபிதுங்கி சென்றனர்.. போலி இன்ப நுகர்ச்சி கிடைத்தாலும் அதன் விளைவுகள் பயங்கரமானவை..!!



மது, சூது, சோதிடம் ஆகியன


சாத்தானின் எளிய செயல்களாகும்


இவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள்.!


வெற்றியாளர்களாவீர்கள்.


அல்குர் ஆன் 5:90

1 கருத்து:

  1. எளிமையான முறையில் எல்லோருக்கும் புரியும் விதத்தில் அருமையான பதிப்பு........

    பதிலளிநீக்கு