ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

மாண்ட தமிழனின் மரண கணக்கெடுப்பு....!!


2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி2009

Tamil Ethnic Cleansing Index

Last Update: Friday, 24 APRIL 2009, 04:15 AM GMT


படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்

Tamils KILLED 8,324

படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்கள்

Tamils critically Wounded 15,912

வன்னியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்

Tamils Killed in Vanni 8,239

வன்னியில் படுகாயப் படுத்தப்பட்ட தமிழர்கள்

Tamils CRITICALLY Wounded in Vanni 15,896

சிறிலங்கா கட்டுப்பாட்டு பகுதிகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்

Tamils Killed UNDER AREAS OF sRI LANKAN OCCUPATION / ADMINISTRATION 85

சிறிலங்கா கட்டுப்பாட்டு பகுதிகளில் படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்கள்

Tamils CRITICALLY Wounded UNDER AREAS OF sRI LANKAN OCCUPATION / ADMINISTRATION 16

சிறிலங்கா கட்டுப்பாட்டு பகுதிகளில் பலவந்தமாய் கடத்தப்பட்டோர் அல்லது காணமல் போனோர்

ENFORCED Tamil Disappearances UNDER AREAS OF sRI LANKAN OCCUPATION / ADMINISTRATION 298

சிறிலங்கா படைகளால் கைதானோர்

Tamils Arrested by Sri Lankan Armed forces 1,771


இந்தக் குறிகாட்டிக்கான தகவல்கள் உரிய முறையில் ஆதாரபூர்வமான தரவுகளிலிருந்து எடுக்கப்படுகின்றன. மருத்துவமனை வட்டாரங்கள், நீதித்துறை வட்டாரங்கள், வடக்கு-கிழக்கு மனித உரிமைச் செயலகம் மற்றும் நம்பகத்தன்டையுடைய ஊடகச் செய்திகள் ஆகியவற்றிலிருந்து மிகவும் கவனமாகச் சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த குறிகாட்டி அமைக்கப்பட்டுள்ளது.


This index is being updated based on firsthand information obtained from Hospital authorities, Police and Judiciary sources in Tamil Eelam and Sri Lanka, The North East Secretariat of Human Rights and credible media outlets.

(நன்றி: புதினம்)

சனி, 25 ஏப்ரல், 2009

அன்னியத் தொழிலாளியின் உழைப்பை உறுஞ்சும் ஒட்டுன்னிகள்..!


கொளுத்தியெடுக்கும் கடுமையான வெய்யிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடி நிற்கின்றனர். சாப்பாட்டுக்குக் கூடப் போதாத தங்களது சம்பளத்தை உயர்த்தக் கோரியும், தாங்கள் அடிமைகளை விடக் கேவலமாக நடத்தப்படுவதை எதிர்த்தும் அவர்களது போராட்டம் தொடங்குகிறது.

போராட்டத்தை ஒடுக்கக் கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. இராணுவம் வரவழைக்கப்பட்டுத் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. ஹெலிகாப்டரிலிருந்து கண்ணீர்ப் புகைகுண்டுகள் வீசப்படுகின்றன. கைது செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை. முன்னணியாளர்கள் நாட்டைவிட்டே வெளியேற்றப்படுகின்றனர்.

பல்லாயிரம் தமிழர்களின் கனவு தேசமாக இருக்கும் ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில்தான் இவையனைத்தும் நடைபெற்றன. அங்கே போராடி, சிறை சென்ற தொழிலாளர்களில் பலர் தமிழர்கள். துபாயில் வேலை என்பதை மக்கள் மிகவும் பெருமையாகக் கருதுகின்றனர். அதனால்தான் துபாய்க்கு அனுப்புவதாகச் சொல்பவர்களிடம், பணம் கொடுத்து ஏமாறுபவர்கள் இன்னமும் தமிழகத்தில் இருக்கின்றனர்.

துபாயின் ஜொலிக்கும் ஆடம்பர மாளிகைகளுக்குப் பின்னால் பல லட்சம் தொழிலாளர்களின் அயராத உழைப்பு இருக்கிறது. தங்களது இரத்தத்தை வியர்வையாய்ச் சிந்தி, அந்தப் பாலைவன தேசத்தைச் சொர்க்க பூமியாக மாற்றிவரும் தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது. நாள் முழுவதும் நகரத்தில் கடுமையாக வேலை செய்யும் அவர்கள், அந்நகரத்தில் தங்குவதற்கு அனுமதியில்லை. நகரத்துக்கு வெளியே பாலைவனத்துக்கு அருகேயுள்ள தொழிலாளர் குடியிருப்பில், ஒரே அறையில் பத்து, பன்னிரெண்டு பேர்வரை ஆட்டு மந்தைகளைப் போல அடைக்கப்படுகின்றனர்.

அதிகாலை எழுந்து சமைத்துவிட்டு வேலைக்குச் சென்றால், வேலையிலிருந்து திரும்ப நள்ளிரவாகிவிடும். வேலைப் பளுவோ மிகவும் அதிகம். வேலை செய்யும் இடத்துக்கு சென்று வர போக்குவரத்து வசதியில்லை. அதற்கென அவர்கள் இரண்டு, மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும். இவ்வளவு கஷ்டப்பட்டும் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளமோ மாதத்திற்கு இந்திய ரூபாயில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரைதான். பல லட்சங்கள் கடன் வாங்கி அங்கு செல்லும் தொழிலாளர்கள் அந்தச் சம்பளத்தைக் கொண்டு வாங்கிய கடனைக் கூட அடைக்க முடியாது.

குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை வேலை செய்தால்தான் ஓரளவுக்காவது சம்பாதிக்க முடியும் என்ற நிலையில், தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தை அங்கு அழைத்துச் செல்லவும் முடியாது. அப்படிச் செய்யவேண்டுமானால் அவர்கள் 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கவேண்டும். இதனால், வெறும் 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் தொழிலாளி ஆண்டுக்கணக்கில் குடும்பத்தைப் பிரிந்து வாழவேண்டும். திருமணமான சில மாதங்களில் குடும்பத்தைப் பிரிந்து போய், குழந்தை வளர்ந்த பிறகு வருபவர்களும் உண்டு.

தங்களது நிலைபற்றி ஒரு இந்தியத் தொழிலாளி கூறும்போது, ""நாங்கள் துபாய்க்கு வருவதற்கு முன்னர் பல கனவுகளோடு வந்தோம். ஆனால் இங்கு எங்களுக்கு வாழ்க்கையே இல்லையென்று இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது'' எனத் தொழிலாளர்களின் குமுறலை வெளிப்படுத்தினார். இன்னொருவரோ, ""சூப்பர்வைசர் வேலை எனக் கூறினார்கள்; அதனால் ஊரில் வளர்த்து வந்த ஆடுமாடுகளை விற்று, நிலத்தை அடமானம் வைத்துவிட்டு வந்தேன்; ஆனால் இங்கு வந்தவுடன் ஒட்டகம் மேய்க்க விட்டுவிட்டார்கள்'' என்று வருந்துகிறார். துபாய்க்கு வந்தவுடன், தொழிலாளர்களின் கடவுச் சீட்டை (பாஸ்போர்ட்டு) நிறுவனத்தினர் பிடுங்கிவைத்துக் கொள்கின்றனர். இதன்மூலம் நிறுவனத்தினர் சொல்லுக்குத் தொழிலாளர்கள் கட்டுப்படவேண்டியிருக்கிறது. 8 மணிநேர வேலை, மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே ஓவர்டைம் என்று கூறப்பட்டாலும், உண்மையில் 18 மணி நேரம் வரை உழைக்க வேண்டியிருக்கிறது.

இவற்றையெல்லாம் பொறுத்துப் பார்த்தும் பலனில்லாததால், தொழிலாளர்கள் ஒன்றுகூடிப் போராட ஆரம்பித்தனர். கடந்த நவம்பரில் துபாயின் மிகப்பெரிய கட்டிட நிறுவனமான ""அராப் டெக்''கின் 40,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இந்தியர், பாகிஸ்தானியர் என்ற தேச முரண்பாடுகளைக் கடந்து, இந்து, முஸ்லீம் என்ற மதப்பிரிவினைகளைக் கடந்து, தொழிலாளி என்ற உணர்வில் ஒன்று சேர்ந்து அவர்கள் நடத்திய போராட்டம் உலகின் கவனத்தையும் ஈர்த்தது. விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் போது 3 தொழிலாளர்கள் இறந்ததையடுத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடங்கியது. இதேபோல குவைத்திலும் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தன. கடுமையான பாலைவன வெய்யிலில் தொழிலாளர்களை 12 மணி நேரம் வேலை வாங்குவது, பாதுகாப்புக் கருவிகள் எதுவும் தராமல் ஆபத்தான வேலைகளைச் செய்யச் சொல்வது, குறைவான கூலி ஆகியவற்றை எதிர்த்துத் தொழிலாளர்கள் போராடினர்.

போராடிய தொழிலாளர்கள் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். கசையடி பெற்றனர். முன்னணியாளர்கள் தாக்கப்பட்டனர். போலீசும் இராணுவமும் வரவழைக்கப்பட்டு போராட்டங்கள் கடுமையாக நசுக்கப்பட்டன. தொழிலாளர்கள் பாதிக்கப்படும்போது வாய்மூடி மவுனமாக இருந்த இந்தியத் தூதரகம், தொழிலாளர் போராட்டம் வெடித்தவுடன் அதனைத் திசைதிருப்பும் விதமாக, குறைந்தபட்ச கூலி என்ற கருத்தை மட்டும் முன்வைத்தது.

இந்த போராட்டத்தினால் உருவான நெருக்கடியினை சமாளிக்க துபாய் அரசாங்கம் தொழிலாளர் நலச்சட்டம் என்ற பெயரில், தொழிலாளர் நலனுக்கே எதிரான ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டம் வேலை நிறுத்தத்தை தடை செய்வதோடு, அதில் ஈடுபடுபவர்களையும் கடுமையாக தண்டிக்க வழிவகை செய்கிறது. உழைக்கும் பெண்களுக்கு எதிரான விதிகளை இச்சட்டம் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு கூட்டாட்சியில் மட்டும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த அறுபதாயிரத்துக்கும் அதிகமான பெண்கள் வீட்டு வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கான அடிப்படை உரிமையைக் கூட இந்தச் சட்டம் வழங்க மறுக்கிறது.

உலகமயமாக்கலின் பெயரில் தேசம் கடந்து பன்னாட்டு நிதி மூலதனங்கள் துபாயில் கொண்டுவந்து குவிக்கப்பட்டுள்ளன. அவற்றைக்கொண்டு பாலைவனத்துக்கு நடுவே மிகப்பெரிய நகரங்களை உருவாக்குவது, உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடங்களைக் கட்டுவது, கடலுக்கு நடுவில் ஈச்சமர வடிவிலான ஓட்டல்களைக் கட்டுவது என ஒரு மாய உலகைக் கட்டியமைக்கும் பணியில் ஏகாதிபத்தியங்கள் ஈடுபட்டுள்ளன. அதற்கு தெற்காசிய கூலித்தொழிலாளிகளின் அடிமை உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கின்றனர். ஐரோப்பிய நகரங்களுக்கு இணையான தரத்தில், அதே சமயம் மிகவும் மலிவான கூலியில் நகரங்களை உருவாக்க முடிகிறது என்பதால், உலக முதலாளிகள் துபாயில் முதலீடு செய்ய போட்டி போடுகின்றனர். இப்படி மூலதனம் பல்கிப் பெருக, தங்கு தடையற்ற சுதந்திரம் வழங்கியுள்ள ஏகாதிபத்தியங்கள், தொழிலாளர்களது சுதந்திரத்தை மட்டும் கிள்ளுக்கீரையாக்கியுள்ளன.

அண்மைக்கால ஏகாதிபத்திய பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு அரபு நாடுகளில் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கின்ற நிலையில், பெறுகின்ற சம்பளத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை உணவுக்கே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி துபாய் சென்று வேலைக்கு சேர்ந்தவர்கள், அந்தக் கடனை எப்படி அடைப்பது எனத் தெரியாமல் பரிதவிக்கின்றனர். விட்டால் போதும் என்று சொந்த நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பேர் வரை இந்தியாவுக்கு திரும்ப விமானச் சீட்டுக்குப் பதிவு செய்துள்ளனர்.

மலிவான கூலி கொடுத்து தொழிலாளர்களை சுரண்டி வரும் அரபு நிறுவனங்களோ தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதாக இல்லை. ""இரும்பு, கற்கள், சிமெண்ட்டு என அனைத்துக் கட்டுமானப் பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டது. ஆனால், தொழிலாளர்களின் விலை மட்டும் அப்படியே மலிவாக இருப்பதுதான் எங்களுக்கு சவுகரியமாக இருக்கிறது'' என்று அங்கிருக்கும் ஒரு நிறுவனத்தின் அதிகாரி கூறுகிறார்.

இந்திய தொழிலாளர்களை கரும்புத் தோட்டங்களில் கசக்கி பிழிந்து, தன்னை வளப்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் போன்று, தெற்காசிய நாட்டு தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது துபாய். துபாயின் உயர்ந்து நிற்கும் மாளிகைகளுக்கு பின்னால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் துயரம் தோய்ந்த வாழ்க்கை அடங்கியிருக்கிறது. இத்துயரங்களும் குமுறல்களும் எரிமலையாக வெடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.


நன்றி: மதி- தமிழ் அரங்கம்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

அரசியல் காமெடி..!

நான் you tube வீடியோ தொகுப்புகளை பார்த்துக் கொண்டிருக்கும்போது இந்த காமெடி வீடியோ காட்சியை நண்பர் ஒருவர் பதிந்திருந்தார். ஆமாங்க.. அது காமெடி இல்லை அத்தனையும் உன்மை. தமிழ் நாட்டை இத்தனை வருடமா ஆண்டு அனுபவித்தவர்கள் கூறுபோட்டுவித்தவர்கள் குடுமிபிடி சண்டை போட்டிருந்தால் எப்படி இருக்கும். நான் பார்த்ததை என் நண்பர்களும் காண இதோ.............

சனி, 18 ஏப்ரல், 2009

போடுங்கம்மா ஓட்டு..! இந்த மாதிரி ஆள பார்த்து..?


'அரசியலை சாக்கடை என்று சொல்லி படித்தவர்களும், பண்புள்ளவர்களும் ஒதுங்கிப் போனால், அதை யார்தான் சுத்தம் செய்வது?' என்று சினிமாவில் வசனம் பேசுகிற பல ஹீரோக்கள்... நிஜ வாழ்கையில் ஓட்டுப் போடுவதோடு தங்கள் ஜனநாயக் கடமையை முடித்துக் கொள்கிறார்கள். படித்தவர்களும் பண்புள்ளவர்களும்கூட இந்த சாக்கடைக்கு பயந்து ஒதுங்கிக் கொள்வதால் ரவுடிகளும், கட்டை பஞ்சாயத்து ஆசாமிகளும் இன்று அரசியலை தம் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்.இந்த நிலையில், 'சாக்கடையை சுத்தம் பண்ண நான் ரெடி' என காலெடுத்து வைத்திருக்கிறார் 29 வயதே ஆன சரத்பாபு. பிரியாணி, குவார்ட்டர் பாட்டில் என முகம் மாறிப் போயிருக்கும் இன்றைய அரசியலில், அறிவையும் உழைப்பையும் கேடயமாகக் கொண்டு தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

சரத்பாபு.நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) எம்.பி.ஏ. பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற 'பிட்ஸ்-பிலானியில்' இன்ஜினீயரிங் பட்டமும் வாங்கியவர். ஐ.ஐ.எம்-மிலும், பிட்ஸ்-பிலானியிலும் படித்த அத்தனை பேரிடம் இல்லாத ஒரு கூடுதல் 'தகுதி' சரத்பாபுவுக்கு உண்டு.ஆம். சரத்பாபு மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில் பிறந்தவர்! அவருடைய அம்மா மடிப்பாக்கத்தில் தெருவோரம் சிறு இட்லி கடை நடத்தியவர். அதன்மூலம் கிடைத்த வருமானத்தில்தான் இத்தனை பட்டங்களையும் பெற்றார் சரத்பாபு. பட்டங்கள் மட்டுமா?இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க 'யூத் ஐகான்' விருதும் பெற்றவர் சரத்பாபு. ஐ.ஐ.எம்-மில் படித்தவர்களெல்லாம் பல லட்சம் மாத சம்பளத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களில் உயர் பதவிகளில் செட்டில் ஆவது வழக்கமாக இருக்க... சரத்பாபு எடுத்தது மாறுபட்ட முடிவு. பொதுவாக ரிப்பன் வெட்டும் எந்த நிகழ்ச்சிக்கும் போகாத இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, சரத்பாபு முதல் முதலாக காலேஜ் ஒன்றில் கேன்டீன் துவங்கியபோது அதன் துவக்க விழாவுக்கு வந்து இவரை உற்சாகப்படுத்தினார்.

இத்தனை தகுதிகள் இருந்தாலும், இதோ சாந்தமாக தென்சென்னை தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கிறார் சரத். பிரசாரம் முடித்த ஒரு மாலைப் பொழுதில், அவருடைய ராயப்பேட்டை அலுவலகத்தில் அவரை சந்தித்தோம்.ஒரு டிபிக்கல் அரசியல் கட்சி அலுவலகம் போல் இல்லாமல், ஒரு காலேஜ் காம்பஸ் மாதிரி இருந்தது அலுவலகம். கம்ப்யூட்டரில் வாக்காளர் பெயர் பட்டியலை பார்த்து விவாதித்தபடி, தென்சென்னை வரைபடத்தை டேபிளில் விரித்து வைத்து, நண்பர்களுடன் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். அந்த வேலைகளுக்கிடையே நம்மிடம் பேசினார் சரத்பாபு.''என்னோட சின்ன வயசில எங்க அம்மா சாப்பாடு வேணாம்டானு சொல்லிட்டு, அடிக்கடி தண்ணி குடிச்சுக்கிட்டே இருப்பாங்க. 'தண்ணின்னா அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கு'னு சின்னப் பையன் நானும் நினைச்சுட்டு இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது, இட்லி கடையில் கிடைக்கிற வருமானத்தை வச்சு அம்மா, நான், ரெண்டு அக்கா, ரெண்டு தம்பினு ஆறு பேர் எப்படி சாப்பிட முடியும்? அதான் எங்க அம்மா தண்ணீரை குடிச்சே வயித்தை நிறைச்சுட்டு இருக்காங்க.ஆனாலும் என் வயித்துக்கும், அறிவுக்கும் பட்டினி போடாம நல்லா படிக்க வச்சாங்க. படித்து முடிச்சதும் பல லட்ச ரூபாய் சம்பளத்துக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலை வாய்ப்புகள் வந்துச்சு. எனக்கு அதெல்லாம் பெரிசா தெரியலை. எங்க குடும்பம் பட்டிருந்த கடனை அடைக்க ஒரு கம்பெனியில் கொஞ்ச நாள் வேலை செய்தேன். பிறகு, அம்மா நடத்தி வந்த அதே இட்லி கடையை நடத்த ஆரம்பிச்சேன். தாய் எட்டடி பாய்ஞ்சா, குட்டி பதினாறு அடி பாய்ஞ்சு ஆகணுமில்லையா? அதனால கடைய கொஞ்சம் பெரிசா ஆரம்பிச்சேன். சென்னை, கோவா, பிலானி, ஹைதராபாத்னு பல ஊர்கள்ல இருக்கும் பல பல்கலைக்கழக கேன்டீன்களை இப்ப நடத்திக்கிட்டு இருக்கேன். வருஷத்துக்கு ஏழு கோடி ரூபாய் புழங்கும் இந்த பிசினஸ் மூலமா சுமார் 250 பேருக்கு வேலையும் கொடுத்திருக்கேன்.

பணம் எந்த விதத்துலயும் என்னை மாத்திடலை. முன்ன இருந்த அதே மடிப்பாக்கம் ஏரியா வீட்லதான் இப்பவும் இருக்கேன். சின்னப் புள்ளையில இருந்து பாத்துப் பழகின மாமா பொண்ணைத்தான் கட்டிக்கிட்டேன். நான் டாக்டர் கிடையாது. ஆனா, ஸ்கூலுக்கு போற ஒரு பையனை பார்த்தாலே அவன் சாப்பிட்டிருக்கானா இல்லையான்னு கண்டுபிடிச்சுடுவேன். கண்டுபிடிச்சு என்ன பிரயோஜனம். அவன் சாப்பிட ஏதாவது வழி செய்யணுமில்லையா..? அதனாலதான் தென்சென்னை வேட்பாளரா போட்டி போடறேன். நான் போட்டி போடறேன்னு கேள்விப்பட்டதுமே, எனக்கு அறிமுகம் இல்லாதவங்ககூட என்னோட சேர்ந்து எனக்காக வாக்கு சேகரிக்கிறாங்க. அரசியல்னாலே ஒதுங்கிப் போறவங்களை, குறிப்பா இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவந்து அதை சேவை செய்கிற தளமா மாத்தணும். அதுதான் என்னோட ஒரே திட்டம்!'' என நெஞ்சை நிமிர்த்துகிறார் சரத்பாபு.

( இது மாதிரி இளைஞர்கள் அரசியளுக்கு வந்தால் சாதி , மதம், இனம், மொழி என்று பார்க்காமல் படித்தவன் சுரு சுருப்பாக இயங்குவான் என்பதை மட்டும் கருத்தில்கொண்டு வாக்களிப்பார்கள் மக்கள்).

"போடுங்கம்மா ஓட்டு படித்த இளைஞர்களை பார்த்து".

நன்றி : ஜுனியர் விகடன்

நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

கள்ள ஓட்டை எல்லாம் நல்ல ஓட்டா மாற்றுவது எப்படி..?


பரபரப்பான தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் பம்பரமாய் சுழன்றுகொண்டு இருப்பார்கள். எந்தந்த பகுதிகளில் எப்படியெல்லாம் பொய்சொல்லலாம் வாக்குறுதிகளை அள்ளிவீசலாம் என்று யோசித்து யோசித்தே பெரும்பாலும் அரசியல்வாதிகள் வழுக்கையாகவே காணப்படுகிறார்கள். பாராளுமன்றத்தை தூக்கி நிறுத்தும் உருப்பினர்கள் பணத்தாலேயே நிர்னயிக்கப்படுகிறார்கள். சாதியை ஒழிப்போம் சாதி இல்லா தமிழ்நாடு உருவாக்குவோம் என்று முழங்குபர்கள் எல்லாம். அந்த சாதி அங்க வெல்லுமா..?. இந்த சாதி நம்மை ஆதரிக்குமா என்று சாதிக்கொறு சங்கங்களை சேர்த்துக்கொண்டு சகட்டு மேனிக்கு புழுகுவார்கள். இன்னும் சம்பாரிக்க ஏதாவது வழிகிடைக்காதா என்று கூனிக்குறுகி ஓட்டு கேட்கும் அரசியல்வாதிகளும். அவர்களின் இனிப்பான பேச்சைக்கேட்டு விழிபிதுங்கும் வாக்காளர்கலும். தான் இங்கே கதாநாயகர்கள்.

இதெல்லாம் அரசியல்ல சகஜம்பா..!!. ன்னு நீங்க சொல்றது எனக்கு புரியிது. சாக்கடையை நோண்டினா நாறத்தானே செய்யும். பாத்தீங்களா...? நான் சொல்லவந்தது என்ன . இப்ப சொல்றது என்ன . ஒரேயொறு வேண்டுகோள்ங்க..?. அதாவது ஒரு நாட்டினுடைய வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களித்து ஒருவர் வெற்றிபெற்றால் தான் அது முழுமையான வெற்றி. வெரும் 40% முதல் 60% வரை ஓட்டு விழுந்தால் மற்றவர்கள் என்ன ஆனார்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்களில் லட்சக்கனக்கானவர்கள் வக்களிக்க இயலாமல் போய்விடுகிறது. இதை பயன்படுத்தி கள்ள ஓட்டு போட்டு தகுதியே இல்லாத ஒருவன் வெற்றி பெருகிறான் .

இதற்கு வழிதான் என்ன..?. தமிழர்கள் அதிகமாக பிழைப்பைத் தேடி செல்லும் வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன், மேழும் எங்கெல்லாம் இந்திய கடப்பிதழ் உள்ளவர்கள் நிறைந்து இருக்கிறார்களோ அங்கெல்லாம் அந்த அந்த நாட்டு இந்தி (இந்திய) தூதரகம் மூலமாக அவர்களும் வாக்களிக்க வழிவகை செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் ஒவ்வொறு இந்திய குடிமகனும் தங்களுடைய வாக்குரிமையை செழுத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுக்களாம். இந்தியாவைவிட வரியநாடான இந்தோனேசியாவில் இம்முறை நடைமுறையில் உள்ளது.

சென்றவாரம் அங்கு நடந்த தேர்த்லில் கூட அண்டை நாடான மலேசியாவில் வேலை செய்யும் இந்தோனேசியர்கள் வாக்களிக்க ஏதுவாக ஒவ்வொரு தபால் அலுவலகத்திலும் அதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டு வக்குரிமையை செழுத்தினார்கள். இது போன்ற ஏற்ப்பாடுகளை இந்திய அரசாங்கமும். மேற்கொண்டால். கள்ள ஓட்டை தவிர்த்து நல்ல ஓட்டை பெற்று வெள்ளலாம். எந்த ஆட்சியாளர்களாவது முயற்சி செய்வார்களா..?


(என் கூற்றில் உன்மை இருந்தால், உடன்பாடு இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடுங்கள் உங்கள் மனக்கண்னைத் திறந்து.)

வியாழன், 16 ஏப்ரல், 2009

துபாயின் உயரிய "MRM" விருது பெற்றது தமிழரின் நிருவனம்.?



துபாயின் உயரிய கௌரவமிக்க "சேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம்" வியாபார விருது (Business Award), ரியல் எஸ்டேட் பிரிவுக்காக தமிழ் நிறுவனமான "ETA STAR PROPERTY DEVELOPER" நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சென்ற வருடம் ரியல் எஸ்டேட் ஜாம்பாவனான "EMAAR" நிறுவனமே இந்த விருதை"TAMEER" மற்றும் "UNION PROPERTY" போன்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட போது இந்த வருடம் இந்த பிரிவின் விருதை ஒரே நிறுவனம் அதிலும் தமிழ் நிறுவனம் தட்டிச்சென்றது மேலும் சிறப்பு.


இன்று காலை துபாய் "மதீனத் ஜுமைரா" வில் நடந்த சிறப்பு மிக்க விழாவில்,
இந்த பெருமை மிக்க விருதை, அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், துபாயின் ஆட்சியாளருமான உயர்திரு. முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களிடமிருந்து ETA குழுமத்தின் தலைவர் "வியாபார விஞ்ஞானி" உயர்திரு.செய்யது சலாஹூதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

சென்ற வருடம் கட்டுமானப் பிரிவில் "ETA ASCON" இந்த விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது என்றாலும், உலக பொருளாதார வீழ்ச்சி எனும் சுழற்காற்று வீசிவரும் இந்த வேளையில் இப்படி ஒரு பெருமைமிக்க சாதனை விருதை தட்டிச்செல்வது சாதாரண விசயமில்லை, அதை ஒரு தமிழ் நிறுவனம் சாதித்திருப்பது நாம் எல்லோரும் பெருமை படக்கூடிய விசயமே...

கடந்த முப்பது வருடங்களாக தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வெளிநாட்டில் குறிப்பாக அமீரகத்தில் ' ஏ மதராசி என்று அலட்சியமாக அழைத்தவனெல்லாம் ஆப் மதராசி ஹை?! (வரி உபயம்:அண்ணாச்சி) என்று ஆச்சரியமாகக் கேட்க வைத்தற்கு காரணமான ஒரு பெருமை மிக்க நிறுவனமான ETA குழுமத்தின் கிரீடத்தில், இந்த விருது மேலும் ஒரு வைரமாக மிளிருமென்றால் அது மிகையாகாது.
அனுப்பியவர் : கரிசை. ஹைதர். துபை
நன்றி: சாருகேசி

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

ஒடுக்கப்பட்டவன் ஏன் உரிமையைத் தேடி மதம் மாறுகிறான்? - தந்தைப் பெரியார்



ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்! -
(பெரியார் சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931)


நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது
என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும்.
இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது.
இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.
ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

கட்டியவனை இழந்தால், கைகொட்டி இழிபேசும் சமுதாயம்..!!

சமுதாயத்தில் இருக்கும் மூடபழக்கவழக்கங்களிலேயே மிகவும் கொடுமையானது கணவனை இழந்தவள் நிலைதான்.. ஆம் ஒன்றா இரண்டா..ஒடுக்குமுறைகள்..!. கணவனின் இறப்புக்கு காரணம் அவளா..?. பின்னே ஏன் முடக்கிவைக்கப்படுகிறாள் மூலையிலே..? பெற்ற பிள்ளையின் திருமணத்தில் கூட பின்னால் இருந்து தானே வாழ்த்துகிறாள்..! தடைக் கல்லை உடைத்துக்கொண்டு சபைக்கு வருவது எப்போது..?. துருப்பிடித்த பழக்க வழக்கங்களை தூக்கியெறிந்து விட்டு நவீன சமுதாயம் படைத்தால்..??.இவர்களின் மனவேதனையை கொஞ்சமாவது மாற்றலாம் அல்லவா..!!.

கைம்பெண்னின் கதறல்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பொட்டிழந்தேன், பூவிழந்தேன்,
புருசனை இழந்தற்காக..!
இழந்து இருட்டிலே வாழ்வதை விட,
அக்கால பெண்கள் போல்,
உடன்கட்டை ஏற உள்ளம் துடிக்கிறது,
கணவனை இழந்தவள் கைம்பெண்னாம்..!
வீதியில் உலாவந்தாள்,
விந்தயாய் சாடுகின்றனர்.!!
நல்ல காரியங்கள் நான்முன்னின்றாள்,
நடந்தேறாது என்கிறார்கள்.?
கட்டியவனை இழந்து ,
கதறும் உள்ளத்தை,
கத்தியால் குத்துகிறார்களே..!!
இது நியாயமா...?,
என் போன்ற கோடி பெண்களின்,
குமுறலைப் போக்க,
விதவையை வீட்டில் பூட்டி வைக்கும்,
மூடத்தனதை நீக்க,
வாலிபனே..முன் வரமாட்டாயா....??
பரவாயில்லை,
பரவாயில்லை..
வயோதிகனே..!!
நீயாவது - என்னை,
வாழ்கைத் துணைவியாக,
ஏற்றுக்கொள்வாயா..??
உன் மீதி வாழ்கையின்
ஊன்றுகோலாக - நான்..
இருந்துவிட்டுப் போகிறேன்....!
..............................................................
ஆக்கம் : "கவி" ஹக்

திங்கள், 6 ஏப்ரல், 2009

மலேஷிய தலைமைத்துவத்தில் "RAHMAN" பார்முலா..??


மலேஷியா 1957 ஆகஸ்ட் 31 ல் சுதந்திரம் வாங்கியவுடன் முதல் பிரதமராக பொருப்பேற்றுக்கொண்டவர். துங்கு. அப்துற் ரஹ்மான் இவர் இந்நாட்டின் தந்தை என போற்றப்படக்கூடியவர். இவர் 31 ஆகஸ்ட் 1957 முதல் 22 செப்டம்பர் 1970 வரை 13 வருடங்கள் ஆட்சி செய்தார்.



நாட்டின் இரண்டாவது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் துன். அப்துற் ரசாக். இவர் நாட்டின் விவசாய வளர்ச்சில் முக்கிய பங்காற்றியவர். இவர் 22செப்டம்பர் 1970ல் இருந்து 14 ஜனவரி 1976 வரை ஆறுவருட ஆட்சிசெய்தார்.




நாட்டின் மூன்றாவது பிரதமர். துன். ஹுசைன் ஓன் இவர் 14 ஜனவரி 1976 முதல் 16 ஜூலை 1981 வரை ஆட்சி செய்தார்.





நாட்டின் நான்காவது பிரதமர் .டாக்டர். துன் . மகாதிர் முகமது. விவசாய நாடான மலேஷியாவை தொழில்வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றியவர். சிங்கப்பூரை மட்டுமே தெரிந்து வைத்திருந்த உலக நாடுகளுக்கு கோலாலம்பூரைத் தலைநகரமாக கொண்ட மலேஷியாவை உயர்த்திக்காட்டியவர். "நவீன மலேஷியாவின் சிற்பி" என்றும் போற்றப்படக்கூடியவர். இந்திய வம்சாவளியில் வந்தவரான இவர் 16 ஜூலை 1981 முதல் 31 அக்டோபர் 2003 வரை 22 ஆண்டுகள் நல்லாட்ச்சி நடத்தினார். இப்போதும் மூத்த ஆலோசகராக நாட்டிற்க்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் சேவையாற்றி வருகிறார்.



ஐந்தாவது பிரதமர் டத்தோ ஸ்ரீ. அப்துல்லா அஹ்மத் படாவி. இவர் மகாதிர் பதவி விலகிய 31 அக்டோபர் 2003 முதல் 2 ஏப்ரல் 2009 வரை ஆட்சி செய்தார்



நாட்டின் ஆறாவது பிரதமராக. டத்தோ ஸ்ரீ. நஜீப் ரசாக் அவர்கள் ஏப்ரல் 3 ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இவர் நாட்டின் இரண்டாவது பிரதமர் அப்துற் ரசாக்கின் மகனாவார். பாராளுமன்றத்திலே ரானுவம், மற்றும் நிதியமச்சராக சிறப்பாக பனியாற்றியவர். இவரும் நல்லாட்சி தருவார் என நம்புகிறோம்.


இப்போது தலைப்புக்கு வருவோம்.


1). ABDUL RAHMAN,

2)......... ABDUL RASAAK,

3) .........HUSSEIN ONN,

4)..........MAHATHIR BIN MUHAMAD

5)..........ABDULLAH AHMAD BADAWI

6)...........NAJIB RASAK,

இது தான் சீக்ரெட்...!! " RAHMAN" பார்முலா..