உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 ஜூலை, 2010

இதற்கு யார் பொருப்பு..?

எதற்கு என்று கேட்காதீர்கள்..... உலகின் அனைத்து நிகழ்வுகளுக்கும் நாமும் ஒருவகையில் காரணம். இருப்பவனிடம் இருந்து எடுத்து இல்லாதவனிடம் கொடுக்கும் ராபின் வுட் என்ற களவானியை ஒரு கதாநாயகனாக பார்க்கும் நாம்
ஏன்..? கதநாயகனாக மாறக்கூடாது.
இது என்னடா வம்பாப் போச்சி அப்ப களவாட சொல்றீகளான்னு கேட்காதீர்கள். அது தெருதேங்காயை எடுத்து வழிப் புள்ளயாருக்கு உடைத்த கதை போல் ஆகிவிடும். ஆகவே அதன் கருப்பொருளான இருப்பவன் இல்லாதவன் என்ற கருத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
அதாவது அடுத்தவனை விட நம்மிடம் சற்று கூடுதலாக இருக்கும் பட்சத்தில் நாம் ஏன் அந்த அடுத்தவனுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்யக்கூடாது. தேடித்திரிந்துதான் உதவி செய்யவேண்டும் என்பது இல்லை. ஒவ்வொருவரும் நம்மை சுற்றியுள்ளவர்களை பார்த்துக்கொண்டாளே.! ஒரு தெரு, ஒரு ஊர்,வட்டம், மாவட்டம்,மாநிலம்,நாடு உலகமே , இன்புற்றிருக்கும்.
நாமே கொடுக்க முன்வரும்பொழுது அங்கு ஒரு ராபின்வுட்டுக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. நாம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு உணவுப் பொருட்களை நாம் ஒன்று இருக்கும்போது உப்பில்லை காரமில்லை என்று வீனடித்து கொட்டிவிட்டு இன்னொன்றை சாப்பிடுகிறோம். அந்த உப்பில்லா உணவுகூட இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலையும் எத்தனை மனிதர்கள் செத்து மடிகிறார்கள் தெரியுமா...?.
இதை எழுதும் நான் கடையேழு வள்ளலும் இல்லை உங்களை வள்ளலாக சொல்லவும் இல்லை.
நீ ஒரு கை சோற்றை கொட்டும் முன் இதற்காக ஏங்குபவற்களை மனதில் கொண்டாலே.... பசியால் வாடும் வயிருகலே இல்லை என்ற நிலை வந்துவிடும்.
என்னை பாதித்தது உங்களையும் பாதிக்கட்டுமே....!!










இதற்கு நேர்மாறாக உள்ள சில படங்கள்

இதில் அரபுக்கள் மட்டும்தான் குற்றவாளிகளா..?. அடுத்தவன் பசித்திருக்க நாம் மட்டும் புசித்துவிட்டு மிச்சத்தை வீனடித்தால் நாமும் குற்றவாளிதான்..!

இதில் உள்ள படங்கள் போல் ஆப்ப்ரிக்காவில் மட்டும் மக்கள் பசியால் மடிவதில்லை. நம் நாட்டிலும் தான்.
உதவிக்கு மதம், ஜாதி, மொழி,பார்க்காமல் மனிதநேயத்துடன் நடந்தால் மனுடம் செழிக்கும்.

வியாழன், 16 ஏப்ரல், 2009

துபாயின் உயரிய "MRM" விருது பெற்றது தமிழரின் நிருவனம்.?



துபாயின் உயரிய கௌரவமிக்க "சேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம்" வியாபார விருது (Business Award), ரியல் எஸ்டேட் பிரிவுக்காக தமிழ் நிறுவனமான "ETA STAR PROPERTY DEVELOPER" நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சென்ற வருடம் ரியல் எஸ்டேட் ஜாம்பாவனான "EMAAR" நிறுவனமே இந்த விருதை"TAMEER" மற்றும் "UNION PROPERTY" போன்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட போது இந்த வருடம் இந்த பிரிவின் விருதை ஒரே நிறுவனம் அதிலும் தமிழ் நிறுவனம் தட்டிச்சென்றது மேலும் சிறப்பு.


இன்று காலை துபாய் "மதீனத் ஜுமைரா" வில் நடந்த சிறப்பு மிக்க விழாவில்,
இந்த பெருமை மிக்க விருதை, அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், துபாயின் ஆட்சியாளருமான உயர்திரு. முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களிடமிருந்து ETA குழுமத்தின் தலைவர் "வியாபார விஞ்ஞானி" உயர்திரு.செய்யது சலாஹூதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

சென்ற வருடம் கட்டுமானப் பிரிவில் "ETA ASCON" இந்த விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது என்றாலும், உலக பொருளாதார வீழ்ச்சி எனும் சுழற்காற்று வீசிவரும் இந்த வேளையில் இப்படி ஒரு பெருமைமிக்க சாதனை விருதை தட்டிச்செல்வது சாதாரண விசயமில்லை, அதை ஒரு தமிழ் நிறுவனம் சாதித்திருப்பது நாம் எல்லோரும் பெருமை படக்கூடிய விசயமே...

கடந்த முப்பது வருடங்களாக தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வெளிநாட்டில் குறிப்பாக அமீரகத்தில் ' ஏ மதராசி என்று அலட்சியமாக அழைத்தவனெல்லாம் ஆப் மதராசி ஹை?! (வரி உபயம்:அண்ணாச்சி) என்று ஆச்சரியமாகக் கேட்க வைத்தற்கு காரணமான ஒரு பெருமை மிக்க நிறுவனமான ETA குழுமத்தின் கிரீடத்தில், இந்த விருது மேலும் ஒரு வைரமாக மிளிருமென்றால் அது மிகையாகாது.
அனுப்பியவர் : கரிசை. ஹைதர். துபை
நன்றி: சாருகேசி

திங்கள், 6 ஏப்ரல், 2009

மலேஷிய தலைமைத்துவத்தில் "RAHMAN" பார்முலா..??


மலேஷியா 1957 ஆகஸ்ட் 31 ல் சுதந்திரம் வாங்கியவுடன் முதல் பிரதமராக பொருப்பேற்றுக்கொண்டவர். துங்கு. அப்துற் ரஹ்மான் இவர் இந்நாட்டின் தந்தை என போற்றப்படக்கூடியவர். இவர் 31 ஆகஸ்ட் 1957 முதல் 22 செப்டம்பர் 1970 வரை 13 வருடங்கள் ஆட்சி செய்தார்.



நாட்டின் இரண்டாவது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் துன். அப்துற் ரசாக். இவர் நாட்டின் விவசாய வளர்ச்சில் முக்கிய பங்காற்றியவர். இவர் 22செப்டம்பர் 1970ல் இருந்து 14 ஜனவரி 1976 வரை ஆறுவருட ஆட்சிசெய்தார்.




நாட்டின் மூன்றாவது பிரதமர். துன். ஹுசைன் ஓன் இவர் 14 ஜனவரி 1976 முதல் 16 ஜூலை 1981 வரை ஆட்சி செய்தார்.





நாட்டின் நான்காவது பிரதமர் .டாக்டர். துன் . மகாதிர் முகமது. விவசாய நாடான மலேஷியாவை தொழில்வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றியவர். சிங்கப்பூரை மட்டுமே தெரிந்து வைத்திருந்த உலக நாடுகளுக்கு கோலாலம்பூரைத் தலைநகரமாக கொண்ட மலேஷியாவை உயர்த்திக்காட்டியவர். "நவீன மலேஷியாவின் சிற்பி" என்றும் போற்றப்படக்கூடியவர். இந்திய வம்சாவளியில் வந்தவரான இவர் 16 ஜூலை 1981 முதல் 31 அக்டோபர் 2003 வரை 22 ஆண்டுகள் நல்லாட்ச்சி நடத்தினார். இப்போதும் மூத்த ஆலோசகராக நாட்டிற்க்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் சேவையாற்றி வருகிறார்.



ஐந்தாவது பிரதமர் டத்தோ ஸ்ரீ. அப்துல்லா அஹ்மத் படாவி. இவர் மகாதிர் பதவி விலகிய 31 அக்டோபர் 2003 முதல் 2 ஏப்ரல் 2009 வரை ஆட்சி செய்தார்



நாட்டின் ஆறாவது பிரதமராக. டத்தோ ஸ்ரீ. நஜீப் ரசாக் அவர்கள் ஏப்ரல் 3 ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இவர் நாட்டின் இரண்டாவது பிரதமர் அப்துற் ரசாக்கின் மகனாவார். பாராளுமன்றத்திலே ரானுவம், மற்றும் நிதியமச்சராக சிறப்பாக பனியாற்றியவர். இவரும் நல்லாட்சி தருவார் என நம்புகிறோம்.


இப்போது தலைப்புக்கு வருவோம்.


1). ABDUL RAHMAN,

2)......... ABDUL RASAAK,

3) .........HUSSEIN ONN,

4)..........MAHATHIR BIN MUHAMAD

5)..........ABDULLAH AHMAD BADAWI

6)...........NAJIB RASAK,

இது தான் சீக்ரெட்...!! " RAHMAN" பார்முலா..

வெள்ளி, 27 மார்ச், 2009

விளக்கனைத்து புது யுகம் படைப்போம்.


உலக இயற்கை நிதியத்தின் சார்பி்ல ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் பூமி நேரம் என்ற நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை(28.03.2009) நடைபெறுகிறது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படவுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த பூமி நேரம் (Earth Hour) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது உலக இயற்கை நிதியம்.
இந்த நிகழ்வின்போது உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், இல்லங்களில் அவசியம் இல்லாத விளக்குளை ஒரு மணி நேரத்திற்கு அணைக்க அழைப்பு விடப்படும்.புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது.
2008ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர்.
உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓரா ஹவுஸ், ரோம் நகரின் கொலீசியம், அன்டார்டிகாவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.
இந்த ஆண்டு பூமி நேரம், வருகிற சனிக்கிழமை (28ம் தேதி) இரவு எட்டரை மணி முதல் ஒன்பதரை மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை 1000 நகரங்களைச் சேர்ந்த 100 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏதோ நம்மால் முடிந்தது பூமிக்கு நன்மை செய்யவிட்டலும் தீமை செய்யாமலாவது இருப்போம்..!.