ஆஹா...... அடிமை வாழ்க்கையின் அச்சானி முறிந்தது, விடியளைத் தேடி வென்புறா பறந்தது, என்று ஆனந்த கூத்தாடினான் அவன். ஆறு மாத சம்பளத்தை அப்படியே சேர்த்துவைத்து ஊருக்குப் போக ஜமான்கள் வாங்கினான் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து பொருட்களை வாங்கினான் குறை வரக்கூடாது என்பதற்காக...?. அவனுக்கும் தேவையான பொருள்களை வாங்கினான் (ஊரை ஏமாற்ற...?). பயணத்தை தொடங்கினான் பந்தங்களைக்காண ஆறத்தழுவி வரவேற்றார்கள் அவன் கொண்டுசென்ற பெட்டியை பார்த்தபடியே...?.
வெளிநாட்டில்இருந்து வருபவர்களின் வீட்டில் நடக்கும் சம்பிரதாயங்களில்
பெட்டி பிறிப்பது என்பது முக்கியமானதாகும். சொந்தங்கள் சுற்றியிருக்க
பெட்டியை பிரித்து ஒனக்கு எனக்கு என எடுத்துக்கொள்வார்கள். அவ்வாறே அவனும் பிரித்தான். இந்தாங்க....... அம்மாவுக்கு கைலி, தாவனி, ஒடிக்களம்,
கோடாலிசாப் தைலம், அக்காவுக்கு சேலை, வாட்ச், லக்ஸ் சோப்பு,
டார்லி பவ்டர், இப்படி ஒவ்வொருவருக்கும் பகுந்து கொடுத்தும் குறை வந்தது. பத்துநாட்களுக்குள் பத்திரிக்கை அடித்து கல்யாணமும் வைத்தார்கள்.
தேன் நிலவு தெவிட்டாத இன்பம் இப்படியாக ஆறுமாத காலம் அரைநொடியாய் கறைந்தது. மனைவி போட்டுட்டு வந்த நகைகளும் வங்கியில் பாடம் படித்தது. "பழைய கிழவி கதவை தொரடி" என்பது போல் அடிமை வாழ்க்கை அவனை விடாது துறத்தியது. புறப்பட்டன் புறமுதுகிட்டு
ஐந்தாறு மாதங்கள் அணலாய் தாக்கியது. அவனுக்கு குழந்தையும் பிறந்தது. தாங்கமுடியா சந்தோசம். தான் பெற்ற பிள்ளையை காணத்துடித்தது அவன் மனம். புறப்பட என்னினான் ஆனால் வரும்போது வங்கியில் வைத்த நகை...? வேகத்தடையாய் நின்றது.
நினைத்து நினைத்து வருந்தினான் அவன், "ஊரிலேயே பிழைப்பை தேடியிருக்கலாமோ..?, சொந்தபந்தங்களோடு சொகமா வாழ்ந்து இருக்கலாமோ..?". அவன் மனமே அவனை குத்திக்குடைந்தது. "ஊரில் கூலிவேலை செய்பவன்கூட குடும்பத்தோட இருக்கானே" எனக்கு மட்டும் ஏன்..ஏன்...? இந்த பொலப்பு..? புலம்பி புலம்பி உலகை வெருத்தவன் போல் உலருகிறான் இங்கே.............!!
வெருப்பாத்தான் இருக்கு _ சில நேரம்,
வேம்பைக் கடிச்சதுபோல்,
கசப்பாத்தான் இருக்கு..!,
"ஆணி' காலனி போட்டுதான்,
ஆகாரம் தேடவேண்டுமோ..?,
கூனிக் குருகியபிறகுதான்,
குடும்பத்தைக் காணமுடியுமோ..?,
தேனீக்கள் பலலட்சம்,
தேடிவந்து கொட்டியது போல்,
தேகமெல்லாம் கடுக்குதப்பா..!!,
என்ன பொலப்பு இது..?,
எவன் கத்துக் கொடுத்தது இது..??,
எங்கே போய் சொல்லுற்து..,
நமக்கு பொறந்த புள்ள,
கருப்பா..?, சிவப்பான்னு..??,
கேவலம்..!
கோனிக்காவும், கோடாக்கும்,
சொல்லித்தான் தெரியனுமா..!?,
ஆருயிர் மனைவிகூட,
ஐ எஸ் டி கால் போட்டுதான்,
வாழனுமா...?
வேர பொலப்பு ஒன்னிருந்தா..?
விட்டிரலாம் இந்த பொலப்ப.,
ஊரு பொலப்பு ஒன்னு கெடச்சா..?
உருப்படியா வாழ்ந்திடலாம்...!.
குறிப்பு:- இது ஒரு விழிப்புணர்வுக்காக எழுதப்பட்ட கதை. இதில் உள்ள உன்மை ஒவ்வொரு வெளிநாடு வாழ்நம்மவர்களுக்கும் தெரிந்திருக்கும்.
நானும் ஒரு வெளிநாடுவாழ் அடிமைதான். நாம் படும் கஷ்டம் நம் பிள்ளைகளும் பட வேண்டாம். உள்ளூரிலேயே படிக்கவைப்போம். எந்த வேலையாக இருந்தாலும் அது நம் நாட்டிலேயே என்ற உருதி கொள்வோம்.
நம் எண்ணம், குறிக்கோள், அனைத்தும் உள்நாட்டு வேலையையே நாடினால் அதற்க்கான முயற்சியும் செய்தால் இன்ஷா அல்லாஹ் நமக்கு பிந்தியசமுதாயம் அடிமை சங்கிலியை அருத்தெரிந்து புதிய சகாப்தம் படைக்கும்..........!! முற்றும்....
என்றும் அன்புடன்... "கவி" ஹக்
இந்த மூன்று பாகத்தையும் வெளிநாடு வரதாத அல்லது அதைப்பற்றியே தெரியாத ஒருவரிடம் படிக்கச்சொன்னால் நிச்சயமாக புரியாது அதாவது உணர்ந்து கொள்ள முடியாது என்கிறேன் அதேபோல் இந்த எண்ணம் உள்ளவர்களிடம் நாம் சொன்னால் நீ சம்பாரித்துவிட்டாய் நான் சம்பாரிப்பது உனக்கு பிடிக்கவில்லை போல் என்று நேரிடையாக சிலர் சொல்வார்கள் அல்லது நமக்கு பின் சொல்வார்கள்.
பதிலளிநீக்குமுடிவுக்கு வருகிறேன்.
இதற்காக முடிவுகள் தான் என்ன? இதைப்பற்றி மார்க்கம் என்ன சொல்கின்றது? போன்ற வகையில் முடிவரை வரும் என்று எதிர்பார்த்தேன்.
மேலும் இது ஒருபக்க பிரச்சனைகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் பாதிப்பான மறுபக்கம் பெண்கள் பாடு மேலும் சமுதாயச் சீரழிவுகள் போன்றவைகளை கணக்கிட்டுப் பார்த்தால் நிச்சயமாக நாம் மெல்லாம் பெரும் பாவிகள் பட்டியலில் சேர்ந்துவிடுவோம். அல்லாஹ்தான் நம்மை மன்னிக்வேண்டும்.
எனக்கு தெரிந்த சில தற்காலிக யோசனைகள்
1. நோக்கம்.. தொளிவாக இருக்கவேண்டும். அதாவது எத்தனை ஆண்டுகள் நாம் வெளிநாட்டில் இருக்கவேண்டும் இவ்வளவு சம்பாரித்வுடன் நாடு திரும்பவேண்டும் என்று.
2. முடிந்த வரை வெளிநாட்டில் இருக்கும் வரை குடும்பத்துடன் வாழ்வதற்கு முயற்சி செய்யவேண்டும்.
3.குறைந்தபட்சம் வருடம் ஒரு முறையாவத விடுமுறையில் சென்று வரவேண்டும்.
4. தேவைகளை குறைத்துகொள்ள பழகவேண்டும்.- மனம் விரும்பியவாறு இல்லாமல்
5. இஸ்லாமிய அடிப்படையை விட்டு சிறிதும் பிறழாமல் வாழ்வேன் என்று சபதம் ஏற்று நடைமுறை படுத்த வேண்டும்.
Mohamed Sathakkathulla
மிக அருமை. இதை நினைத்தால் எப்படி சம்பாரிப்பது
பதிலளிநீக்கு