அத்தனை வேலைப் பழுவிலும் கட்டிய பணத்திற்க்காகவாவது காலம் கடத்தவேண்டுமே..!, என்று புழுங்கிய அவனுக்கு முதல்மாத சம்பளகவர் ஆருதலாக இருந்தது. இந்த சந்தோசமான செய்தியை வீட்டிற்க்கு போன் செய்து சொல்வோம். என என்னியபோதுதான் ஞாபகம் வந்தது "அத்தா நீ நல்லபடியா சம்பாரிச்சி வாங்கிய முதல்மாத சம்பளத்தில் அல்லாஹ் பேரால கந்தூரி ஆக்கனும்னு நேந்துக்கிட்டேன்" என்று ஊரில் இருந்து புறப்படும்போது அவன் அம்மா கூறியது. உடனே பணத்தை அனுப்பிவைத்தான்.இப்படி சம்பளம் வாங்குவதும் அனுப்புவதுமாகவே காலம் ஓடியது. விடுமுறை நாட்களில் ஊர்க்காரர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றுவந்தான். அவர்களின் நிலை கண்ட இவன் மனம் " அடப் பாவிகளா நீங்க ஊருக்கு வந்தா வெள்ள வேட்டி சட்டைபாக்கெட்டில் சலவைத்தாள்கள் என்று பண்ணிய பந்தாவை பார்த்துதானடா எனக்கும் இந்த நிலமை" என்றது. அவர்கள் இவனைக் கண்டதும் தங்கள் பொலப்பு இப்படித்தான் என்று இயல்பை விளக்கினார்கள்.
கடிகாரமுள்ளைக் காலில் கட்டிக்கொண்டதுபோல் சுழன்று வந்த அவன். செக்கில் பூட்டிய மாடுபோல பகலிரவாய் பாடுபட்டான் பட்டகடனை அடைக்க, நாட்காட்டி பார்க்காமலேயே நகர்த்திவிட்டான் நாட்களை.......!!. ஊர் ஞாபகங்கள் தான் ஒளிநாடாவாய் ஓடியது. ஓடித்திறிந்த தெருக்கள், பாடித்திறிந்த வயல்வெளிகள், தாலாட்டிய தாய். இப்படி ஒவ்வொன்றாய் வந்துவந்து மறைந்தன. அன்றுதான் தெரியும் அவனுக்கு தான் அயல்நாடு வந்து ஆயிரம்நாட்கள் கடந்துவிட்டது என்று...!. முட்டியது அழுகை... கொட்டினான் மணக்குமுறளை............. இதோ..........

பத்து நூறு நாட்களை,
மெத்தனமா கடத்திவிட்டேன்,
மிச்ச நாளும்...!
சொச்ச பொழுதும்,
நட்டுவச்ச கல்லுபோல,
நகர மாட்டேங்குது..?,
அம்மாவின் நினைவுகள்தான்,
அடிமனதின் ஆழத்தில்,
ஆயுதமாய் குத்துகிறது..!!,
பாசத்தை மறந்துதான்,
பணத்தைத் தேடவேண்டுமோ..?,
குமுருகிறதொரு மனம்..!
அடேய்....,
பணமிருந்தால் தானடா,
பாசமுள்ள மனசும்,
சந்தோசமாக இருக்கமுடியும்.
என்று எச்சரிக்கிறது..!,
இன்னொறு மனம் - இப்படி,
மனங்களின் மல்யுத்தத்தினூடே,
பிறக்க ஒரு ஊர்..!
பிழைக்க ஒரு ஊர்..!! - என்ற,
நம்மவர்களின் தலையெழுத்தில்,
நான் மட்டுமென்ன..?
விதிவிலக்கா..! - என்று
என்னினேன்....
என்னை நானே தேற்றிக்கொண்டேன்..!!
தொடரும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக