அன்று முழுவதும் அவனுக்கு சாப்பாடும் ஏறவில்லை, தூக்கமும் வரவில்லை. வெளிநாடு எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டெ தனது கற்பணைக் குதிரையைத் தட்டிவிட்டான்.....!. 'பணம் மழையாக கொட்டுகிறது. இவன் பில்கேட்ஷின் பேரன்போல அதில் புறல்கிரான்..',. " மாப்ளே" , "மாப்ளே" கற்பனையை கலைக்கிறது ஒரு குறள். திரும்பிப்பார்த்தால் அவன் தாய் மாமு..?. இத்தனை நாளும் எட்டிபாற்காத மனுசன் அன்று அவிழ்த்து விட்டார் அட்வைசுகளை.... "மாப்ளே பாஸ்போர்ட் டிக்கெட் எல்லாம் பத்திரமா எடுத்து வச்சாச்சா, போய் இறங்கியதும் மாமுக்கு போன் போடுங்க, அங்க போய் நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கனும் யார் வம்புக்கும் போகப்புடாது". என்று அடுக்கிக்கொண்டே போனார். அவனுக்கு புரிந்தது அது அவர் மகளை கட்டிவைக்க போடும் அஸ்திவாரமென்று..!.
சொந்தங்கள் புடைசூழ பள்ளிவாசல் சென்று பேரிச்சம்பழம், கற்கண்டு வைத்து பாத்திஹா ஓதிவிட்டு ஆயத்தமாகிறான் அடிமை வாழ்க்கைக்கு..?. சிலர் முருக்கு, கடலைமிட்டாய், அல்வா, மிச்சர் என்று விதவிதமான தின்பண்டங்களை ஏற்கனவே அயல்நாடுவாழ் அடிமைகளுக்கு குடுத்தனுப்பினார்கள் (அப்பவாவது குடும்ப நெனப்பு வரட்டும் என்றோ..?). சொந்தங்களைப் பிரியும் சோகத்தில் அவனுக்கு அழுகை முட்டியது..!. சொந்தங்களும் கண்னைக் கசக்கியவற்களாக வழியனுப்பி வைத்தார்கள்......
படித்துக்கொண்டு இருந்த அவனுக்கு இது ஒரு புதிய அனுபவம் தான். அவன் தாய் நாட்டைத் துறந்து ஏரோப்பிலேனில் ஏறியது முதல் இறங்கும் வரை எதையோ இழந்தவன் போல் இருந்தான். வெளிநாடு என்றால் படுக்க வைத்து பணம் கொடுப்பார்கள் என்றே இதுநாள்வரை அவன் நினைத்திருந்தான்..! (பாவம் பணம் கொடுத்து ஏற்க்கும் அடிமைப் பதவி இது என்பதை அறியவில்லை போலும்). ஏர்போட்டில் இறங்கியதும் ஏஜண்ட் வந்து அழைத்துச்சென்று பூட்டிவிட்டான் இயந்திரத்தின் ரெக்கயிலே..... 1 நாள், 2 நாள், 3 நாள் வேலைக்குப் பிறகு.... உடலின் வலி அவனுக்கு உண்மையை கூறியது....
பள்ளிப் பருவத்திலேயே பாலாப்போன
வெளிநாட்டு மோகம்..!.
பகல் இரவாய் பசுமரத்து ஆணிபோல் பதிகிறது,
படிக்கும் வயதிலேயே பறக்க ஆசைப்படுகிறான்.
இதற்கு... உள்ளூரில் பிழைக்கத்தெரியாமல்
அயல்நாடு சென்று திரும்பும் நம்மவர்கள் செய்கின்ற
ஆடம்பரம் தான்..? அத்தனைக்கும் ஆரம்பம்..!. ஆம்,
அங்கே 6 க்கு 6 அறையினிலே நாலு பேரு தங்கிக்கிட்டு
நல்ல சாப்பாடு, நல்ல துணிமணி உடுத்தாமல்..
சேத்துவைத்த காசில் "கோல்டு வாட்சும் ,
மார்டின் சட்டையும் , ஒன்மேன் ஷோ செண்டும் ,
உதட்டருகே ரோத்மேன் சிகரெட்டும்".
மூன்று வருடம் உழைத்த காசை மூன்று மாதத்தில்..?
கரைத்துவிட்டு கப்பலேரிப் போவோரைத் தானே நாம்
ரோல் மாடலாக எடுத்துக்கொள்கிறோம்.
உள்ளூரில் உழைப்பதை நாம் ஏன் சிந்திப்பதில்லை..?,
வெளிநாடு சென்றால் ஜாலியாக இருக்கலாம்..!
கொட்டிக்கிடக்கும் காசுகளை கோனிப்பையில்
அள்ளிவிடலாம், என்ற அல்ப ஆசையினால் தானே..!.
அயல் நாட்டில் காலடி எடுத்துவைக்கும் ஒவ்வொரு
இளைஞனின் இதயத் துடிப்புதான் இங்கே.................
அழகிய ரோஜா என,
அள்ளிப் பறிக்க வந்தோமே.
அதனடியில் முட்கலென்று,
அறியாமல் போனோமே..!,
ஆனதினால் என் செய்வது..?,
ஆகாயம் கடந்துவிட்டோமே,
இயந்திர வாழ்க்கையடா இப்பூவில்.!,
இருப்பினும் பரவாயில்லை..?
இஸ்லாத்தின் இனியமணம்,
ஈற்க்கத்தான் செய்கிறது..!,
உறவுகளை மறந்தால்தானே,
ஊதியத்தைப் பார்க்க முடியும்.
எருதுகளுடன் பூட்டிய,
ஏறு போல...!
ஒத்து சென்றால்தானே,
ஓங்கி வளரமுடியும்..!
ம்ம்ம்ம்.......?
பூவடியில் முள்ளிருந்தாலும்,
பூ கொடுக்கும் தேனெடுக்க..?,
அயல்நாட்டு வண்டுகள்,
அதனருகே.....
மொய்க்கத்தான் செய்கிறது.....!!
...................................................................................
தொடரும்.........
தொடரும்.........
உங்களது ஆதங்கம் புரிகிறது.கொஞ்சம் கொஞ்சமாக சமுதாயம் மாறி வருகிறது.இத்தகைய மாற்றத்துக்கு தாம் அமைப்புகள் பாடுபடுகின்றன
பதிலளிநீக்கு