திங்கள், 25 மே, 2009

"ஒற்றுமை" சொல்லும் எருமை



காட்டில் கொழுத்த எருமைக்கூட்டம் ஒன்று எப்போதும் ஒன்றாகவே மேய்ச்சலுக்கு சென்று ஒன்றாகவே படுக்கைக்கும் செல்லும் பழக்கமுடையன. இவை பலமுறை எதிரிகளை ஒன்றாக சேர்ந்து ஓட ஓட விரட்டி அடித்திருக்கின்றன.

ஆனால் காட்டு ராஜாவான சிங்கம் எப்படியாவது எருமைகளின் மாமிசத்தை ருசிக்க என்னியது. இருப்பினும் எருமைகளின் கூற்மையான கொம்பைக்கண்டுதான் அச்சமுற்றது. இதற்கு வழி என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது. அவ்வழியே ஒரு நரி வந்தது. சிங்கத்தின் கவலைதோய்ந்த முகத்தைக்கண்ட நரி காரணத்தை கேட்டறிந்து சிரித்தது இவ்வளவுதானா..? கவலையை விடுங்கள் எனக்கு ஒரு நாள் மட்டும் அவகாசம் தாருங்கள் அதன் பிறகு பாருங்கள் என் புத்தி கூற்மையை என்றது நரி.

அடுத்த நாளே தனது வேலையை ஆரம்பித்தது நரி. ஒவ்வொரு எருமையையும் தனித் தனியாக சந்தித்த நரி. "நீ ரொம்ப பயந்தாங்கொள்ளியாம். கோழையாம். அதனால் தான் நீ மற்ற எருமைகளின் துணையோடு திரிகிறாயாம். என்று மற்ற எருமைகள் உன்னை தாழ்வாகப் பேசிக்கொள்கின்றன" என்று தனது வஞ்சக சூழ்ச்சியை அவிழ்த்து விட்டது.

அடுத்தநாள் சதியை மதியால் வெல்லத் தெரியாத எருமைகள் தனிதனியே பிரிந்து மேயத்தொடங்கின. சிங்கத்தின் வேலை சுலபமானது நாளொரு எருமையாக கொன்று தனது ஆசையை தீர்த்துக்க்கொண்டது.

இந்த கதை எதற்கு என்றால் ஒரு சமுதாயத்தினுடைய எழுச்சியும் வளர்ச்சியும் ஒற்றுமை என்ற அச்சாணியிலேதான் உள்ளது. ஒற்றுமை குலைந்ததனால் அழிவையும் இழிவையும் தழுவிக்கொண்ட சமுதாயங்கள் ஏராளம்.

தமிழீழக்கனவும் தவிடுபொடியானது இந்த ஒற்றுமையின்மையால் தான். இனி எஞ்சியிருக்கும் சமுதாயமாவது ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிப் பிடித்துக்கொண்டால் கானொளியில் கண்டதைப்போன்று வெற்றிபெற்ற சமுதாயமாக வாழலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக