ஞாயிறு, 24 மே, 2009

திரைகடல் கடந்து (???) தேடு..!


அயல்நாடு சென்று வேலை செய்பவர்களில் சிலர் வீட்டில் கட்டியவள் இருக்கிறாள் என்பதையே மறந்து குட்டுச்சுவரா போவதும் உண்டு. சிலர் காரியத்தில் கண்னா இருந்து பொருள் ஈட்டியதும் குடும்பத்தை கவனிப்பவர்களும் உண்டு. இப்படித்தான்..................

திரைகடல் கடந்து திரவியம் தேட சென்ற ஒருவன்,
திசைமாறி சென்றதினால் திக்கற்று தெருவிலே நிற்கிறாள் ஒருத்தி..!!,
இருப்பது போதும் என்று நினைக்காத அவளின்மீது குற்றமா..?
இச்சையை அடக்கமுடியாத அவன் மீது குற்றமா..?,
எதுவாகிலும் குழந்தைகள் என்ன குற்றம் செய்தார்கள்..!,
ஏன் இந்த இளமையில் வறுமை..!!,
இதோ சந்திக்கு வந்தவள் சிந்தித்து கூறுகிறாள்.........


என்மகன் மூத்தபயல்,

ஏழாவது படிக்கிறான்,

எம்பி எம்பி ஓட்டிப்போக,

சைக்கிள் ஒன்னு கேட்கிறான்,

இல்லேன்னு சொல்ல,

பெத்த மணம் வரல..!

வாங்கிக் கொடுக்கவோ,

வக்கத்தவளுக்கு வழியில்லை..!!,

இளையவன் பொறந்த,

இரண்டு மாசத்துல,

வெளிநாடு போன எம்புருசன்,

மாதங்கள் கரைந்தோட,

வருடங்கள் உருண்டோட,

வருசமும் பத்தாச்சி..!!

வீடுவந்து சேரலீங்க...?,

அவ்ககூட போனவ்கள்லாம்,

கட்டிட்டாங்க அடுக்குமாடி..!,

ஆனா எங்கவீட்டு மண்சுவரு,

போனமாசம் அடித்த,

பொயல் காற்றில்,

பொத்தென்று சாஞ்சிருச்சி..!!,

ஓலைக்கீத்து வச்சி,

ஒருபக்கமா அடச்சிருக்கேன்..?,

சீமையில எனக்கொறு,

சக்கலத்தி இருக்கான்னு..!

வந்தவங்க வாய்வழியா,

வதந்தியா தெரிஞ்சிக்கிட்டேன்..!!,

ம்ம்ம்ம்........

வாக்கப்பட்டு வரயில நான்..?,

நாப்பது சவரன் நகை போட்டு.!

நஞ்சை புஞ்சை நாலு ஏக்கரும்..!!,

கட்டியவரு ஓட்டிப்போக,

டி வி எஸ் மோட்டாரும்..!!!,

இன்னும் எத்தனைய சொல்லுவேன் நான்..!,

ஏன்னா........

இத்தனையும் வித்துட்டுதான்,

கப்பலேறி போனாரு..!!,

ஒன்னு ரெண்டாகுமென்று,

நான் நினைத்தேன்..?,

இன்னொருத்தி வருவான்னு..!!,

கனவில்கூட நினைக்கலையே..


ஆக்கம்: "கவி" ஹக்

2 கருத்துகள்:

  1. பெயரில்லா24 மே, 2009 அன்று 6:41 PM

    TAMPIN RASUL....SYABAS TEA MASTER!!!!
    TEA KADAI BENJ LA NALLA SEITHI ONNU VANTHIRUKKU..
    KEEP IT UP...INNUM NALLA NALLA THAILAPPUGAL KIDAIKKA VAALTHUGIREN....INTHA PAARAATTU OK VAA?

    பதிலளிநீக்கு
  2. உங்கள்மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. சகோ. ரசூல் உங்களின் பின்னூட்டத்திற்க்கு ரொம்ப நன்றி. உங்களின் வாழ்த்துக்களை எல்லாம் படிக்கட்டுகளாக்கி மென்மேழும் எழுத தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு