செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010
பெண் தற்கொலை: கணவர் உள்பட 4 பேர் மீது புகார்
பேராவூரணி அருகேயுள்ள பத்துக்காட்டைச் சேர்ந்தவர் நைனாமுகமது மகன் அஜ்மீர் அலி (28) இவருக்கும், ஈரோடு மாவட்டம், ஐங்கேனிகோரையைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் மகள் வாவாம்மாள் (24) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ரம்ஜானுக்கு சீர் கொடுப்பதற்காக ஈரோட்டிலிருந்து வாவாம்மாளின் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை பத்துக்காடு வந்தனர். அப்போது சீர்வரிசை குறைவாக உள்ளதாகக் கூறி, அஜ்மீர் அலி குடும்பத்தினர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த வாவாம்மாள் திங்கள்கிழமை காலை வீட்டில் தனியாக இருந்த போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்துல் அஜீஸ் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரில் தனது மகள் சாவுக்கு மாமியார் முகமது பீவி மாமனார் நைனாமுகமது, கணவர்அஜ்மீர் அலி, நாத்தனார் நூர்ஜகான் ஆகியோர்தான் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸர் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
நன்றி : தினமணி
திங்கள், 23 ஆகஸ்ட், 2010
மரண அறிவிப்பு
இவர்களுக்கு ஆறுமாதத்திற்க்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது நமது ஊரிலேயே நடந்திறாத ஒரு சம்பவம் ஆகும். பரக்கத்தினுடைய மாதமான ரமழானில் இப்படி ஒரு சோக நிகழ்வு ஊரையே சோகத்தில் உறைய வைத்திருக்கிறது. பொருத்திருந்து பாப்போம் யார் குற்றவாழி என்று...?. அல்லாஹ் மிகப் பெரியவன்.
வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010
இணையம் வழி இஸ்லாமிய பாடத்திட்டம். www.islahme.com
முதலாவது நோன்புடன் ஆரம்பமாகும் இக் கற்கை நெறி 24 நாட்களுக்கு 12 பாடங்களைக் கொண்டதாக இருக்குமென அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘அல்குர்ஆனை அணுகும் முறை' என்ற இப்பாடத்திட்டத்திற்கான வழிகாட்டல்களை ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.ஸீ.அகார்முஹம்மத் (நளீமி) நெறிப்படுத்துவார். பாடநெறி முடிவில் சித்தியடைந்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களை என்ற இணையத்தளதில் http://www.islahme.com/ பெறலாம்.
ஞாயிறு, 25 ஜூலை, 2010
இதற்கு யார் பொருப்பு..?
ஏன்..? கதநாயகனாக மாறக்கூடாது.
இது என்னடா வம்பாப் போச்சி அப்ப களவாட சொல்றீகளான்னு கேட்காதீர்கள். அது தெருதேங்காயை எடுத்து வழிப் புள்ளயாருக்கு உடைத்த கதை போல் ஆகிவிடும். ஆகவே அதன் கருப்பொருளான இருப்பவன் இல்லாதவன் என்ற கருத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
அதாவது அடுத்தவனை விட நம்மிடம் சற்று கூடுதலாக இருக்கும் பட்சத்தில் நாம் ஏன் அந்த அடுத்தவனுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்யக்கூடாது. தேடித்திரிந்துதான் உதவி செய்யவேண்டும் என்பது இல்லை. ஒவ்வொருவரும் நம்மை சுற்றியுள்ளவர்களை பார்த்துக்கொண்டாளே.! ஒரு தெரு, ஒரு ஊர்,வட்டம், மாவட்டம்,மாநிலம்,நாடு உலகமே , இன்புற்றிருக்கும்.
நாமே கொடுக்க முன்வரும்பொழுது அங்கு ஒரு ராபின்வுட்டுக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. நாம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு உணவுப் பொருட்களை நாம் ஒன்று இருக்கும்போது உப்பில்லை காரமில்லை என்று வீனடித்து கொட்டிவிட்டு இன்னொன்றை சாப்பிடுகிறோம். அந்த உப்பில்லா உணவுகூட இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலையும் எத்தனை மனிதர்கள் செத்து மடிகிறார்கள் தெரியுமா...?.
இதை எழுதும் நான் கடையேழு வள்ளலும் இல்லை உங்களை வள்ளலாக சொல்லவும் இல்லை.
நீ ஒரு கை சோற்றை கொட்டும் முன் இதற்காக ஏங்குபவற்களை மனதில் கொண்டாலே.... பசியால் வாடும் வயிருகலே இல்லை என்ற நிலை வந்துவிடும்.
என்னை பாதித்தது உங்களையும் பாதிக்கட்டுமே....!!











இதற்கு நேர்மாறாக உள்ள சில படங்கள்





இதில் அரபுக்கள் மட்டும்தான் குற்றவாளிகளா..?. அடுத்தவன் பசித்திருக்க நாம் மட்டும் புசித்துவிட்டு மிச்சத்தை வீனடித்தால் நாமும் குற்றவாளிதான்..!இதில் உள்ள படங்கள் போல் ஆப்ப்ரிக்காவில் மட்டும் மக்கள் பசியால் மடிவதில்லை. நம் நாட்டிலும் தான்.
உதவிக்கு மதம், ஜாதி, மொழி,பார்க்காமல் மனிதநேயத்துடன் நடந்தால் மனுடம் செழிக்கும்.
ஞாயிறு, 16 மே, 2010
மரண அறிவிப்பு
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"). எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.ஆமீன்.
வியாழன், 13 மே, 2010
குட்டிக்கதைகள்
| ஒருவர்:வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும். மற்றவர்: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்? ஒருவர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன். மற்றவர்: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர். ஒருவர்: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்! மற்றவர்: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன். ஒருவர்: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது. மற்றவர்: எப்படிச் சொல்றீங்க? ஒருவர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது. மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி. ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே! மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பாவும் வித்தியாசம் தெரியாது.! ............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ...... ............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ........ ஒரு அரசனிடம் சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான்.ஒரு நாள் அரசன் அவனுடன் வெளியூர் சென்றான்.வழியில் இருட்டி விட்டது.எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து, குதிரையைவெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு,வேலைக்காரனிடம்,இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க,அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் தூக்கம் வராது என்றார்.அவனும் சரி என்றான்.சிறிது நேரம் கழித்து அரசர்,அவன் என்ன செய்கிறான் என்பதை சோதிக்க வெளியே வந்தார்.அவனும்,'அரசே,நான்தூங்கவில்லை.வானில்இருக்கும் நட்சத்திரங்கள் தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'என்றான்.நல்லது என்று கூறிச்சென்ற அரசன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார்.அவன் சொன்னான்,'அரசே,கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.' அரசன் நிம்மதியுடன் படுத்து தூங்கிப் போனான்.காலையில் எழுந்து வந்து பார்த்த போதுவேலையாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப் பார்த்த அரசன் ,''இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?''என்று கேட்டார். அவன் சொன்னான்,'அரசே,உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ............. ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ...... ............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ........ மூன்று நண்பர்கள் இறந்து மேல் உலகம் சென்றார்கள். அங்கே எமதர்மன். அவர்களில் முதலாமவனை அழைத்து ‘நீ சின்ன வயதில் ஒரு பறவையைக் கல்லால் அடித்துக் கொன்றாய். அதனால் உனக்குத் தண்டனையாக மிக கோரமான, நோய் பிடித்த பெண்ணை உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்’ என்றார். அடுத்தவனுக்கும் அதே தண்டனை. அதே காரணம் மூன்றாவது நபருக்கு மட்டும் ஐஸ்வர்யாராய் மாதிரி ஒரு அழகியைத் திருமணம் செய்து வைத்தார். நொந்து போன இரண்டு நண்பர்களும், அவனுக்கு மட்டும் ஏன் இத்தனை அழகான பெண்? என்று எமனிடம் கேட்டார்கள். எமனின் பதில் இதுதான். 'இந்த கேசுல தண்டனை அந்த பொண்ணுக்கு" புரிந்தவர்கள் சிரித்துக்கொள்ளலாம்.. ............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ........ |
புதன், 5 ஆகஸ்ட், 2009
அறிவியல் முன்னேற்றம் வரமா..? சாபமா..?
இந்த தலைப்பை வைத்து ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அறிவியலின் துறித வளர்ச்சியுடன் நமது நாகரீகமும் சேர்ந்து வளர்வதால் ஏர்ப்படும் மாற்றங்களில் சில நன்மையை கொடுக்கிறது. சில நம் உடல் நலத்தையே குழி தோண்டிப்புதைக்கிறது. இது வரமா..? சாபமா..?. என்று நினைக்கயில்.... அதிகாலையிலஎந்திரிச்சி கலப்பைய தூக்கிக்கிட்டு வயக்காடு போரதெல்லாம் "அப்போ" . காலையில எந்திரிச்சி காப்பிய குடிச்சிப்புட்டு கட்சிபேச்சி பேசுராங்க "இப்போ" என்ற நாட்டுப்புற பாடல்தான் நினைவுக்கு வரும்.
விஞ்ஞான வளர்ச்சியானது இன்று உலகத்தையே ஒரு பந்துபோல் சுறுக்கிவிட்டது. ஆம் செல்போன் இண்டர்நெட் இன்னும் எத்தனை எத்தனையோ..! கண்டுபிடிப்புகள். உடல் உழைப்பு குறைந்து இன்று கனிப்பொறியின் முன்னே நடைபிணமாய் அமர்ந்திருக்கிறோம்.
அன்று "எரு" விட்டு பயிர் வளர்த்தோம். இன்று "உரம்" வந்தது. அன்று விழைந்த நெல்லை அருத்து, அடித்து, குத்தி, சாப்பிட்டோம். ஆனால் இன்று அத்தனைக்கும் இயந்திரம். அன்று சளிபிடித்தால் துளசிச்சாறு, வயிறு வலித்தால் வேப்பில்லைச்சாறு...!. இன்று அத்தனைக்கும் ஆங்கில மருத்துவம்.
அன்று கேப்பைப் புட்டு சாப்பிட்ட நாம். இன்று பாஸ்ட்புட் சாப்பிடுவதால் தான் நோய்க்கு அடிமையாகி மாத்திரையே உணவாக உட்கொள்கிறோம். எந்த மாற்றம் வந்தால் எதிர்த்திடலாம் எமன் வரவை..!....

இறைவன்படைத்த,
எத்தனை நோய்கள்,