புதன், 5 ஆகஸ்ட், 2009

அறிவியல் முன்னேற்றம் வரமா..? சாபமா..?

இந்த தலைப்பை வைத்து ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அறிவியலின் துறித வளர்ச்சியுடன் நமது நாகரீகமும் சேர்ந்து வளர்வதால் ஏர்ப்படும் மாற்றங்களில் சில நன்மையை கொடுக்கிறது. சில நம் உடல் நலத்தையே குழி தோண்டிப்புதைக்கிறது. இது வரமா..? சாபமா..?. என்று நினைக்கயில்.... அதிகாலையிலஎந்திரிச்சி கலப்பைய தூக்கிக்கிட்டு வயக்காடு போரதெல்லாம் "அப்போ" . காலையில எந்திரிச்சி காப்பிய குடிச்சிப்புட்டு கட்சிபேச்சி பேசுராங்க "இப்போ" என்ற நாட்டுப்புற பாடல்தான் நினைவுக்கு வரும்.

விஞ்ஞான வளர்ச்சியானது இன்று உலகத்தையே ஒரு பந்துபோல் சுறுக்கிவிட்டது. ஆம் செல்போன் இண்டர்நெட் இன்னும் எத்தனை எத்தனையோ..! கண்டுபிடிப்புகள். உடல் உழைப்பு குறைந்து இன்று கனிப்பொறியின் முன்னே நடைபிணமாய் அமர்ந்திருக்கிறோம்.

அன்று "எரு" விட்டு பயிர் வளர்த்தோம். இன்று "உரம்" வந்தது. அன்று விழைந்த நெல்லை அருத்து, அடித்து, குத்தி, சாப்பிட்டோம். ஆனால் இன்று அத்தனைக்கும் இயந்திரம். அன்று சளிபிடித்தால் துளசிச்சாறு, வயிறு வலித்தால் வேப்பில்லைச்சாறு...!. இன்று அத்தனைக்கும் ஆங்கில மருத்துவம்.
அன்று கேப்பைப் புட்டு சாப்பிட்ட நாம். இன்று பாஸ்ட்புட் சாப்பிடுவதால் தான் நோய்க்கு அடிமையாகி மாத்திரையே உணவாக உட்கொள்கிறோம். எந்த மாற்றம் வந்தால் எதிர்த்திடலாம் எமன் வரவை..!....


NO+ய்= நோய்


இறைவன்படைத்த,

என்சான் உடம்பில்,

எத்தனை நோய்கள்,


எழுதி முடியாது,

இரவு பகல் போதாது,

விண்னை முட்டும்,

விஞ்ஞானம் வளர்ந்தாலும்,

காட்டாற்று வெள்ளம் - போல்,

கலக்குது பினியெங்கும்..!

பழங்கால பெரியம்மையும்,

இடைக்கால இளம்பிள்ளைவாதமும்,

இன்று அற்றுப் போனாலும்,

புறப்படுது புற்றீசல் - போல்,

புதிய புதிய நோய்கள்..!,

குடிசை முதல் கோபுரம் வரை,

குருட்டு விஜயம் செய்யும்,

கொல்லை நோய்களால்,

எல்லையில்லா துன்பம்..!!

சொல்ல இயலாது - ஏனென்றால்,

காடு கழனி பாடுபட்டு,

சல்லிகாசு சேக்கயில,

கொல்லிவாய் பிசாசு - போல,

எல்லா நோயும் வந்ததனால்,

சேத்ததெல்லாம் வீனாச்சி,

தேத்திய உடம்பும் கூனாச்சி..!-என்று

புழம்பிய கிழவனுக்கு,

புறிந்தது உன்மை..?,

பயிர் வளர உரமிட்டு,

பூச்சியழிய மருந்திட்டு,

விசத்தை நெல்லாக்கி,

நஞ்சை சோறாக்கி உண்டால்,

பாழும் நோய்களெல்லாம் நம் வீட்டில்,

பாய் போட்டல்லவா படுத்திருக்கும்..!,

ஆதலால்

இயற்கை விவசாயம்,

இனிதே செய்வோம்,

உயிரெடுக்கும் நோய்களை,

உலகைவிட்டு துரத்துவோம்.

ஆக்கம்: "கவி" ஹக்


2 கருத்துகள்:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு