திங்கள், 23 மார்ச், 2009

தஞ்சாவூரின் த்லையெழுத்து மாறுமா..?

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டத் தொகுதிகளில் முக்கியமானது தஞ்சாவூர்.

ஆர்.வெங்கட்ராமன், எஸ்.டி.சோமசுந்தரம் உள்ளிட்ட தலைவர்கள் போட்டியிட்ட பெருமை உடைத்தது தஞ்சாவூர்.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் நிரம்பிய தொகுதி இது. பாரம்பரியம் மிக்க தஞ்சைத் தரணியின் பெயரில் அமைந்த இந்தத் தொகுதியில், 1951ம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது.

தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்பு தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, திருவையாறு ஆகிய சட்ட மன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளது.

புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியில் இடம் பெற்றிருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி தஞ்சை தொகுதியில் புதிதாக இடம் பிடித்துள்ளது.அதே போன்று நாகை பாராளுமன்றத் தொகுதியில் இடம் பெற்றிருந்த மன்னார்குடி தற்போது தஞ்சை பாராளுமன்றத் தொகுதியில் புதிதாக இடம் பிடித்துள்ளது.திருவோணம், பாபநாசம், வலங்கைமான் போன்ற தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

தஞ்சை பாராளுமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து சட்ட மன்றத் தொகுதிகளும் பொது தொகுதிகளே.தஞ்சாவூர் தொகுதியை காங்கிரஸும், திமுகவும் மாறி மாறி வென்றுள்ளன. காங்கிரஸ் 7 முறையும், திமுக 6 முறையும் வென்றுள்ளன. அதிமுகவுக்கு ஒரு முறை வெற்றி கிட்டியுள்ளது.

சட்டசபைத் தொகுதிகளைப் பொறுத்தமட்டில்,

ஒரத்தநாடு தொகுதியில் அதிமுகவின் வைத்தியலிங்கமும், தஞ்சாவூரில் திமுகவின் உபையதுல்லாவும், திருவையாறில் திமுகவின் துரை சந்திரசேகரனும், பட்டுக்கோட்டையில் காங்கிரஸின் ரங்கராஜனும், பேராவூரணியில் அதிமுகவின் வீரகபிலனும், மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவபுண்ணியமும் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த தேர்தல் நிலவரம்

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக) - 4,00,986.
தங்கமுத்து (அதிமுக) - 2,81,838.
வெற்றி வித்தியாசம் - 1,19,148 வாக்குகள்.

இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள்

1951 - ஆர்.வெங்கட்ராமன் -காங்
.1957 - ஆர்.வெங்கட்ராமன் -காங்.
1962 - வைரவத்தேவர் -காங்.
1967 - கோபாலர் - திமுக
1971 - எஸ்.டி. சோமசுந்தரம் - திமுக
1977 - எஸ்.டி. சோமசுந்தரம் - அதிமுக
1980- சிங்காரவடிவேல் - காங்.
1984 - சிங்காரவடிவேல் - காங்.
1989 - சிங்காரவடிவேல் - காங்.
1991 - துளசி அய்யா வாண்டையார் - காங்.
1996 - பழனிமாணிக்கம் - திமுக
1998 - பழனிமாணிக்கம் - திமுக
1999 - பழனிமாணிக்கம் - திமுக
2004 - பழனிமாணிக்கம் - திமுக

முதல் தேர்தல்

நடந்த ஆண்டு - 1951.
வென்றவர் - ஆர்.வெங்கட்ராமன் (காங்.)

நன்றி ; தட்ஸ் தமிழ்

எனது கருத்து

தஞ்சாவூர் தமிழ்நாட்டின் நெற்க் கழஞ்சியம் என்பார்கள். ஒரு காலத்தில் நாட்டிற்கே சோறு போட்ட மாவட்டமக்கள். இன்று சோற்றுக்கே கடையிலும் ரேசனிலும் தான் போய் நிற்க்க வேண்டியுள்ளது. ஏன் இந்த நிலை..?.

ஒன்று காவிரியில் தண்ணீர் வராதால் நீரின்றி பயிர் கருகிவிடும். இல்லை பருவ மழையால் வெள்ளம் வந்து பயிர் அழுகிவிடும். இது தான் நிலை..!. உடனே அரசாங்கம் கண்ணீர் விடும் விவசாயிக்கு கைக்குட்டை வாங்க பணம் கொடுக்கும். என்றாவது போலியான வாக்குறுதிகளை அல்லி வீசும் அரசியல்வாதிகள் நிரந்தர தீர்வுகான சிந்தித்ததுண்டா..?.

தொழிற்ச்சாலைகள் இல்லாத விவசாயம் ஒன்றையே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் மக்களை மறந்ததேன்..?. மேலும் இம்மாவட்டத்தில் தென்னை சாகுபடி அதிகமாக உள்ளதால் தென்னை சம்பந்தமான தொழிற்சாலைகள் கொண்டுவந்து இம்மக்களுக்கு மாற்று வழியைக் காட்ட நினைக்காதது ஏன்..?.

இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள். தேர்தல் சமயத்தில் கையை உயர்த்தி ஓட்டுக் கேட்க்கும் அரசியல்(வியாதி )வாதிகளே.. மக்களின் வாழ்க்கைத் தரத்தை எப்போது உயர்த்தப் போகிறீர்கள்..?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக