செவ்வாய், 31 மார்ச், 2009

இஸ்லாத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் பிர் அவ்னின் உடல்..!

இந்த வீடியோ கூறூம் உன்மைகளை நீங்களும் பாருங்கள்..!!

சாமான்ய மக்களை சந்திக்கு வரவழைத்த துபாயின் மேற்க்கத்திய கலாச்சாரம்..!

வளைகுடா கடற்கரையோரம், துபாய் நகரை பார்த்த படி நிற்கிறது "பெர்ஜ் அல் அரப்" என்று அழைக்கப் படும், பாய்மரக்கப்பல் வடிவில் கட்டப்பட்ட, ஏழு நட்சத்திர ஹோட்டல். ஆமாம், எதையும் பெரிதாகவே சிந்தித்து கட்டப்பட்ட, ஐந்து நட்சத்திரத்தை விட வசதிகள் நிறைந்த ஏழு நட்சத்திர விடுதி அது. அதன் மிகக்குறைந்த அறையின் ஒரு நாள் வாடகை 800 டாலர்கள். துபாய் காரருக்கு எல்லாத்தையும் வித்தியாசமாக செய்ய ஆசை. அதனால், ஹோட்டல் விளம்பரத்துக்காக அமெரிக்காவின் டென்னிஸ் நட்சத்திரம் அன்ரே அகசியை அழைத்து வந்து, உச்சியில் இருக்கும் ஹெலி இறங்கு தளத்தில் டென்னிஸ் விளையாட வைத்தார்கள்.

துபாய் நாட்டின் சின்னமாகி விட்ட பெர்ஜ் அல் அரப்கட்டியதுடன் நின்று விடாது, நவீன உலக அதிசயங்கள் அமைக்க வேண்டுமென்ற ஆசையில், கடலுக்குள் பனை மர வடிவில், உலகப் பட வடிவில், என்று செயற்கை தீவுகளை வேறு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த செயற்கை தீவுகளில், நவீன வசதிகளை கொண்ட குடியிருப்புக்களை கட்டி ரியல் எஸ்டேட் இல் விற்க இருக்கிறார்கள்.

துபாய் முதலாளிகளுக்கு எண்ணை விற்று வந்த கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்வதென்ற கவலை. அதனால் இப்படி பிரமாண்டமான கட்டுமானப் பணிகளை கற்பனை பண்ணி கட்டி கொண்டிருக்கிறார்கள். பணம் உள்ளவர்களின் வாழ்கை வசதிகளை உயர்த்துவதை மட்டுமே குறிக் கோளாக கொண்டு செயற்படும் அரசாங்கம், சாதாரண மக்களுக்காக போக்குவரத்து துறையை விருத்தி செய்யவில்லை. அதை விட கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும், நவீன உலக அதிசயங்களை கட்டிய, கட்டிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் மாத வருமானம் 160 டாலர்களுக்கு மேல் போவதில்லை. மேலும் குறைவான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, கட்டிடங்கள் விழுந்து மடிந்தவர்கள் பலர். இந்திய, பாகிஸ்தானிய கூலி தொழிலாளர்களன அவர்களை பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.. அவர்களின் பெறுமதி சில நூறு டாலர்கள் மட்டுமே. இருபதாம் நூற்றாண்டு நவீன அடிமைகள் அவர்கள்.
2005 ஜனவரி மாதம், ஹஜ் பெருநாள் தொடங்க சில நாட்களே இருந்த காலம். மெக்கா போகும் யாத்திரீகர்கள் எனது விமானத்திலும் நிறைந்திருந்தனர். அவர்கள் ஏன் துபாய் வரவேண்டும்? பேச்சு கொடுத்ததில் சில உண்மைகள் வெளி வந்தன. கனடாவில் இருந்து புறப்பட்ட அந்த யாத்திரீகர்கள், ஒரு சவூதி அராபிய பிரயான முகவர் மூலம் ஒழுங்கு செய்யப் பட்டவர்கள். ஒவ்வொரு பயணியிடமும் நிறைய பணம் வாங்கி கொண்டு, குறைந்த செலவில் டிக்கெட் எடுத்து நாடு நாடக சுற்றி போகும் படி வைத்திருந்தார்கள். பாவம் இந்த அப்பாவி யாத்திரீகர்கள், தாமாகவே பிரயாணம் ஒழுங்கு பண்ண அவர்களுக்கு உரிமையில்லை. சவூதி பிரயான முகவர்களின் ஏகபோக உரிமை மதம் சம்பந்தமான புனித பயணத்தில் கோடி கட்டிப் பறக்கிறது. துபாய் விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது, பாஸ்போர்டை வைத்து பிரயாணிகளை பிரித்து விசா குத்திக் கொண்டிருந்தார்கள். ஐக்கிய அரபு ராச்சியங்கள், மற்றும் பணக்கார வளைகுடா நாடுகளின் பிரசைகளுக்கு முன்னுரிமை, அதற்கு அடுத்ததாக அமெரிக்க அல்லது பிற பணக்கார நாடுகள், கடைசியாக வறிய நாடுகளை சேர்ந்த அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். இந்த பாகுபாடு துபாய் அங்கம் வகிக்கும் ஐக்கிய அரபு எமிறேடின் நிர்வாக அரசியல். அங்கே நீதி கூட இந்த பின்னணியை வைத்து தான் வழங்கப் படுகின்றது.
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த போது, அப்போது ஜனவரி மாதம் என்பதால் வெயில் கடுமையில்லை. சற்றே குளிரான காலநிலை. ஊர் சுற்றிகளுக்கு ஏற்ற காலநிலை. அங்கே பொது போக்குவரத்து அரிது. அதனால் டாக்ஸி, அல்லது தனியார் வாகனம் மட்டுமே தஞ்சம். நான் போய் நின்ற இடம் பழைய துபாய் நகரம். பஜார் நகரம் என்றும் சொல்லலாம். நகை கடைகள், பல சரக்கு கடைகள், மலிவான தங்குவிடுதிகள், எங்கு பார்த்தாலும் இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள்.... இப்படி துபையின் அந்த பகுதி மட்டும் ஒரு சராசரி இந்திய நகரம் மாதிரி காட்சியத்தது. அங்கிருந்து ஒரு சில கி.மி. தூரம் போனால் தான் நவீன துபாய் நகரம் ஆரம்பிக்கிறது. அமாம், துபாய் நகரம் இன்னமும் புது புது குடியிருப்புகள் அமைக்கப் பட்டு பெருகிக் கொண்டே போகின்றது. பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய அல்லது (எமிரேட்) அரேபியர்கள் மட்டுமே வசிக்கும் நவீன வசதிகளை கொண்ட குடியிருப்புகள், அவற்றின் மத்தியில் பாடசாலைகள், பல்பொருள் அங்காடிகள், மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை கொண்ட நியூ யார்க் போன்ற நவீன நகரங்கள்அவை. நட்சத்திர ஹோட்டல்கள், உல்லாச பிரயாணிகள் இளைப்பாறும் கடற்கரை, இப்போது கட்டப் பட்டுகொண்டிருக்கும் உலக அதிசயங்கள் எல்லாமே அங்கே தான்.
இந்த நகரமயமாக்கப் பட்ட கட்டடக் காட்டுக்கு வெளியே, பாலைவனப் பகுதியில் அமைந்திருக்கிறது நவீன அடிமைகளின் முகாம்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தென் ஆசிய நாட்டு கூலி உழைப்பாளிகள், மிகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். தொழில் ஒப்பந்தம் தொடங்கும் நாளன்றே அவர்களின் கடவுச்சீட்டு, சட்டத்திற்கு மாறாக, வாங்கி வைக்கப் படுகின்றது. குறைந்தளவு வசதிகளை கொண்ட முகாம்களில், ஒரு அறைக்குள் எட்டுபேர் என்று தங்க வைக்கப் படுகின்றனர். வேலை செய்யும் இடத்திற்கு தினம்தோறும் கம்பெனி பஸ், தொழிலாளரை ஏற்றி இறக்கும். ஒரு தொழிலாளிக்கு சம்பளம் உட்பட ஆகும் செலவு அதிக பட்சம் முன்னூறு டாலர்கள் மட்டுமே என்பதால், அவர்களின் உழைப்பை சுரண்டுவதன் மூலம், பல கம்பெனிகள் பெருமளவு லாபம் எடுக்கின்றன. மலிவான உழைப்பாளிகள் உருவாக்கும் உற்பத்தி பொருட்கள், அல்லது சேவைகள் ஆகியவற்றின் விலைகள் சர்வதேச தரத்திற்கு உயர்வாக இருப்பதால், இந்த கொள்ளை லாபம் சாத்தியமாகின்றது. உண்மையில் அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய முதலாளிகள், பொறாமைப்படும் அளவிற்கு துபாய் பொருளாதாரம் அடிமைகளால் கட்டப்பட்டு வருகின்றது. அங்கே தொழிலாளர் நல சட்டங்கள் எதுவும் கிடையாது. தொழிற்சங்கங்களுக்கு தடை. வேலை நிறுத்தம் சட்டவிரோதம். வர்த்தக நிறுவனங்கள் வருமான வரி கட்ட தேவையில்லை. மொத்தத்தில் அது ஒரு முதலாளிகளின் சொர்க்கம்.
கூலி தொழிலாளர்கள் மட்டுமல்ல, விற்பனையாளர்கள், எழுதுவினைஞர்கள், மானேஜர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள் போன்ற சேவைத்துறையில் இருப்போரும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து குறைந்த கூலிக்கு கூட்டி வரப்படுகின்றனர். இவர்களின் சம்பளம் சாதாரண வெளிநாட்டு தொழிலாளி எடுப்பதை விட பல மடங்கு அதிகம் என்றாலும், ஒரு சாதரண எமிரேட் தொழிலாளி எடுக்கும் சம்பளத்தை விட குறைவு. சில நேரம் அலுவலக பணியில் இருக்கும் ஐரோப்பியரை விட குறைவு எனலாம். அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் மேல்நிலை மனேஜர்களாக பதவியில் உள்ளனர். அவர்களின் ஊதியம், அவர்களின் தாயகத்தில் கிடைக்கும் அதே அளவு, அல்லது சற்று கூட. இதனால் சில தகுதி குறைந்த அமெரிக்க அல்லது ஐரோப்பியர்கள் கூட துபாயில் செல்வந்த வாழ்கை வாழ்கின்றனர்.
பண்டைய ரோம் நகரத்தில், விவசாய கூலிகள் முதல் ஆசிரியர்கள் வரை பிற நாடுகளில் இருந்து வந்த அடிமைகளே வேலை செய்தனராம். ரோம் மக்கள் அரசு துறைகளிலும், இராணுவத்திலும் மட்டுமே பணி புரிந்தனராம். இதே போன்ற சமூக கட்டுமானம் எமிரேட் முழுக்க உள்ளது. நாட்டின் பிரசைகள் அரசாங்கத்திலும், பாதுகாப்பு படை களிலும் அதிக ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். மேலும் எல்லா வகையான வர்த்தக நிறுவனத்திலும் ஒரு எமிரேட் பிரசைக்கு அரைவாசி பங்கு இருக்க வேண்டும். இதனால் பல எமிரேட் பிரசைகள், சும்மா இருந்தே பணம் சம்பாதிக்கிறார்கள். மிகப் பெரும் முதலீட்டில் நடத்தப் படும் கம்பெனிகள் அமெரிக்கர்கள், அல்லது ஐரோப்பிய முதலளிகளுடயது. இடைதர மற்றும் சிறிய கம்பெனிகளை இந்தியர்கள் நடத்துகின்றனர். வெளிநாட்டினர் துபாயில் எந்த சொத்தும் வாங்க உரிமையில்லை. அவர்கள் வீடு வாங்க, வியாபார நோக்குடன் அனுமதித்தாலும், ஒரு சில கட்டுப்பாடுகளுடன், அவற்றை விற்கும் ரியல் எஸ்டேட் கம்பெனிகள் அல்லது எமிரேட் காரர்கள் லாபம் சம்பாதிக்கும் துறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எண்ணை இருப்பு குறைந்து வருவதால் இது போன்ற வர்த்தகத்தில் துபாய் நாட்டம் காட்டி வருகின்றது. ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்க கண்டங்களுக்கு நடுவில் அமைந்திருப்பதால், துபாயில் பல உலக வர்த்தக கழகங்கள் தமது விற்பனை சாலைகள், போன்றவற்றை திறந்து வைத்துள்ளன. மேலும் வரி சலுகை, சகல வசதிகளுடனான விமான நிலையம், துறைமுகம், குறைந்த கூலிக்கு பிடிக்க கூடிய தொழிலாளர்கள், ஆகிய விஷயங்கள் பல முதலாளிகள் துபாயை தெரிவு செய்ய காரணம்.
துபாய் இவ்வாறு முதலாளிகளின் சொர்க்கபுரி மட்டுமல்ல, உல்லாச பிரயாணிகளுக்கும் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. துபாய் அருங்ககாட்சியகம் குறிப்பிடத்தக்கது. எண்ணை கண்டுபிடிக்கும் வரை துபாய் நகரம் எப்படி காட்சியளித்தது? அதன் மக்கள் எப்படி வாழ்ந்தனர்? போன்றவற்றை அறிய விரும்பினால் அது ஏற்ற இடம். மேலும் துபாய் வணிகர்கள் ஒரு காலத்தில் முத்துகளை உலகம் முழுக்க விற்று வந்தனர். முத்து குளிக்கும் முறை, பற்றி ஒரு பகுதி விளக்குகிறது. இன்னொரு பகுதி பாலை வன சோலையில் பேரீச்சை, பிற விவசாயம் பற்றி விளக்குகின்றது. இவை எல்லாம் நேரே பார்ப்பது போல பொம்மைகளை வைத்து காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் பார்ப்பதை விட்டு, பாலைவன கிராமம் ஒன்றினை அங்கிருந்த வீடுகள், கிணறுகள், தோட்டங்கள், ஒட்டகங்கள்இவ்வாறு அப்படியே இருந்த மாதிரி பார்க்க விரும்பினால், "ஹட்டா ஹெரிடேஜ் வில்லேஜ்" சிறந்த இடம். ஹட்டா துபாய் நகரில் இருந்து 115 கி.மி. கிழக்கு பக்கமாக இன்னொரு எமிரேட் புஜைரா நோக்கி போகும் பாதையில்,ஹசார் மலைகளுக்கு நடுவில் அமைந்திள்ளது. மலைகளின் பின்னணியில் அந்தக் கிராமத்தின் அமைவிடம் அதன் அழகை மெருகூட்டுகின்றது. ஹட்டாவில் தான் எமிரேட்டின் மிகப்பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் பிற பாலைவன வளைகுடா நாடுகளை போலன்றி, எமிரேட்கிழக்கு பகுதியில் விவசாயம் நடக்கிறது. அதற்கு நீர்பாசன வசதி இந்த அணை மூலம் கிடைக்கிறது.

ஐக்கிய அரபு இராச்சியங்கள் ஏழு எமிரேட்களை சேர்த்து உருவானது. அந்த ஏழும் சில சுயநிர்ணய உரிமைகளுடன் ஒன்றிணைந்து ஒரே தேசமாக இயங்குகின்றன. ஒவ்வொரு எமிரேட்டுக்கும் ஒரு ஷேக் அரசியல்/நிர்வாக தலைவராக உள்ளார். ஷேக் என்பது மன்னரை குறிப்பதல்ல. பண்டைய இஸ்லாமிய அரசியல் அமைப்பின் படி ஒவ்வொரு பிரதேசத்திற்கும், ஷேக் என்ற ஒருவர் நிர்வாகத் தலைவராக தெரிவு செய்யப் பட்டு, அரசியல் நிர்வாக அதிகாரம் வழங்கப் பட்டது. ஐரோப்பியரின் வருகைக்கு பிறகு, அதுவும் எண்ணை வளம் கண்டுபிடிக்கப் பட்ட பிறகு தான் இந்த ஷேக்குகள் எல்லாம் கோடீஸ்வரர்களாக, குறுநில மன்னர்கள் போல மாறினார்கள். அபுதாபி, அதிக வருவாய் கொண்டதால், அது தலைநகரம் ஆகி விட்டது. அபுதாபி ஷேக், காலம் சென்ற சையிது, தேசத் தந்தை போலே ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளார். அவரது ஆளுயர உருவப் படங்கள் எமிரேட் எங்கும் காணலாம். அது மட்டுமல்ல, அவருக்கு சொந்தமான பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட ஆடம்பர மாளிகைகள், ஒவ்வொரு நகரிலும் உள்ளது. இராக்கில் சதாம் உருவப்படங்களை, மாளிகைகளை, கேலி செய்த சி.என்.என். போன்ற மேற்கத்தைய ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாதது வியப்புக்குரியது. அபுதாபி, துபாய் மட்டுமே எண்ணை வளம் காரணமாக, பணக்கார எமிரேட்களாக உள்ளன. அவை புஜைரா போன்ற எண்ணை இல்லாத "வறிய" எமிரேட்டுகளுக்கு நிதி உதவி செய்து முன்னேற்றி வருகின்றன. சட்டங்கள் கூட ஒவ்வொரு எமிரேட்டுக்கும் மாறுபடும். துபாய் மேலைத்தேய நாடுகளை போல தாராளவாத கொள்கையை கடைபிடிகின்றது. அங்கே இரவு களியாட்ட விடுதிகள், மதுபான சாலைகள், ஏன் விபசாரத்துக்கு கூட சுதந்திரம் வழங்கப் பட்டுள்ளது. துபாய் அருகிலேயே இருக்கும் ஷார்ஜா என்ற இன்னொரு எமிரேட் இதற்கு மாறாக, மத ஒழுக்க கட்டுபாடுகளை கடுமையாக கடைப் பிடிக்கின்றது. அங்கே மதுபானம் போன்றனவற்றிகு முற்றாக தடை. அபுதாபி ஓரளவு சுதந்திரமும், ஓரளவு கட்டுபாடுகளையும் கொண்டுள்ளது. இதனால் உல்லாச பிரயாணிகளையும், வர்த்தக நோக்கோடு வருபவர்களையும் துபாய் மட்டுமே கவர்வது வியப்புக்குரியதல்ல.
நன்றி: "கலையகம்" கலையரசன்

வெள்ளி, 27 மார்ச், 2009

விளக்கனைத்து புது யுகம் படைப்போம்.


உலக இயற்கை நிதியத்தின் சார்பி்ல ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் பூமி நேரம் என்ற நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை(28.03.2009) நடைபெறுகிறது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படவுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த பூமி நேரம் (Earth Hour) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது உலக இயற்கை நிதியம்.
இந்த நிகழ்வின்போது உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், இல்லங்களில் அவசியம் இல்லாத விளக்குளை ஒரு மணி நேரத்திற்கு அணைக்க அழைப்பு விடப்படும்.புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது.
2008ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர்.
உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓரா ஹவுஸ், ரோம் நகரின் கொலீசியம், அன்டார்டிகாவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.
இந்த ஆண்டு பூமி நேரம், வருகிற சனிக்கிழமை (28ம் தேதி) இரவு எட்டரை மணி முதல் ஒன்பதரை மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை 1000 நகரங்களைச் சேர்ந்த 100 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏதோ நம்மால் முடிந்தது பூமிக்கு நன்மை செய்யவிட்டலும் தீமை செய்யாமலாவது இருப்போம்..!.

வியாழன், 26 மார்ச், 2009

துபாய் கணவன்..


வாழ்க்கைப் பட்டமரமாய் போன,

பரிதாபம் புரியாமல்,

ஈச்சமரம் பக்கம் நின்று,

எடுத்தபுகைப்படம்அனுப்புகிறாய்..! - நீ


இழுத்து செல்கின்ற பெட்டியோடு,

ஒட்டியிருக்கிறது என் இதயம்..!

அனுமதிக்கப்பட்ட எடையோடு,

அதிகமாகிவிட்டதால் ,

விமான நிலையத்திலேயே,

விட்டுவிட்டாயோ..?

என் இதயத்தை..!


திரும்பி வந்துவிடு

என் கணவா.!

என் துபாய் கணவா.!!

வாழ்வின் அர்த்தம்,

புரிந்து வாழலாம்!


சத்தமில்லாமல்,

சமையலறை நுழைந்து,

முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்..!

என் பசி மறந்து உனக்காக,

காத்திருக்கும் பொழுது,

காத்திருக்க வேண்டாமென,

கண்டித்து விட்டு..

ஒரு கையால்

இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!


சாதிச் சான்றிதழுக்காக,,

லஞ்சம் கொடுத்துவிட்டு,

கெஞ்சுபவனைப் போல...

மல்லிகைப்பூ தந்துவிட்டு,

மன்றாடுகிறாய்.!,


பள்ளிக்கு செல்லமறுத்து,

தூங்குவதாய் நடிக்கும்,

சின்னப்பையனை போல,

மடியில் படுத்துக்கொண்டு,

எழ மறுக்கிறாய்..!,


அம்மா வருவதாக,

பாசாங்கு செய்யும்பொழுது....

பதறி எழுந்து,

நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !


கை இழுத்து வைத்து

குளிக்கவைக்க முயலும்போது

குளிரடிப்பதாய் கூறி -ஒரு

குழந்தையை போல அழுகிறாய் !
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்....

கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்..?


கெஞ்சுவதும்...மிஞ்சுவதும்...

அழுவதும்...அணைப்பதும்...

கண்டிப்பதும்...கண்ணடிப்பதும்...

இடைகிள்ளி...நகைஅல்லி...

அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி..!


இவையெல்லாம்

இரண்டே மாதம்தந்துவிட்டு...

எனை தீ தள்ளி

வாழ்வள்ளி சென்றுவிட்டாய்..!

என் கணவா..!

என் துபாய் கணவா..!!


கணவா...எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்...

கனவுகளோடு இருபத்திஇரண்டு மாதமா...?


12வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...

5வருடமொருமுறை ஒலிம்பிக்....

4வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்.... ...

2 வருடமொரு முறைகணவன் ...

நீளும் பட்டியலோடு,

நீயும் இணைந்து கொண்டாய்!


இதுவரமா ..? சாபமா..?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்...

முகச்சாயம் பூசுவோர் உண்டோ?

கண்களின் அழுகையை...

கண்ணாடி தடுக்குமா..?


நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ

கிணறுவெட்டுகிறாய்

நான்மோகத்தில்நிற்கிறேன் - நீ

விசாவைக் காட்டுகிறாய்..!

திரும்பிவந்துவிடு,

என் கணவா.!

என் துபாய் கணவா..!!


வாழ்வின் அர்த்தம்புரிந்து வாழலாம்

விட்டுக் கொடுத்து...

தொட்டு பிடித்து...

தேவை அறிந்து...

சேவைபுரிந்து..

உனக்காய் நான் விழித்து...

எனக்காக- நீ

உழைத்து தாமதத்தில் வரும் தவிப்பு...

தூங்குவதாய் உன் நடிப்பு...


வார விடுமுறையில் பிரியாணி...

காசில்லாநேரத்தில் பட்டினி...ٌ

இப்படி காமம் மட்டுமன்றி

எல்லா உணர்ச்சிகளையும்

நாம் பரிமாறிக் கொள்ளவேண்டும்.

இரண்டு மாதம்மட்டும்,

ஆடம்பரம் உறவு உல்லாசபயணம்.

பாசாங்கு வாழ்க்கை

புளித்துவிட்டது..

என் கணவா!

என் துபாய் கணவா..!!


தவணை முறையில்வாழ்வதற்கு

வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?

எப்பொழுதாவது வருவதற்கு - நீ

என்ன பாலை மழையா?

இல்லை

ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா..!


விரைவுத்தபாலில்

காசோலை வரும்..!

காதல் வருமா.?

பணத்தை தரும் பாரத வங்கி.!

பாசம் தருமா? - நீ

இழுத்து செல்கின்றபெட்டியோடு

ஒட்டியிருக்கிறது என் இதயம்

அனுமதிக்கப்பட்ட எடையோடு

அதிகமாகிவிட்டதால்

விமான நிலையத்திலேயே

விட்டுவிட்டாயோ என் இதயத்தை?


பித்தளையை எனக்கு

பரிசளித்துவிட்டு - நீ

தங்கம் தேடி துபாய் சென்றாயே?

பாலையில் - நீ

வறண்டது என் வாழ்வு!


வாழ்க்கை பட்டமரமாய் போன...

பரிதாபம் புரியாமல் ஈச்சமரம்

பக்கம் நின்று எடுத்த

புகைப்படம் அனுப்புகிறாய்!


உன்துபாய் தேடுதலில்...

தொலைந்து போனது - என்

வாழ்க்கையல்லவா..?

விழித்துவிடு கணவா!

விழித்து விடு -அந்த

கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!


விசாரித்துவிட்டு போகாதே கணவா

விசா ரத்துசெய்துவிட்டு வா!

திரும்பி வந்துவிடு

என் கணவா.!

என் துபாய் கணவா!

வாழ்வின்அர்த்தம் புரிந்துவாழலாம்..!!



ஹைதர் துபை

திங்கள், 23 மார்ச், 2009

தஞ்சாவூரின் த்லையெழுத்து மாறுமா..?

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டத் தொகுதிகளில் முக்கியமானது தஞ்சாவூர்.

ஆர்.வெங்கட்ராமன், எஸ்.டி.சோமசுந்தரம் உள்ளிட்ட தலைவர்கள் போட்டியிட்ட பெருமை உடைத்தது தஞ்சாவூர்.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் நிரம்பிய தொகுதி இது. பாரம்பரியம் மிக்க தஞ்சைத் தரணியின் பெயரில் அமைந்த இந்தத் தொகுதியில், 1951ம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது.

தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்பு தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, திருவையாறு ஆகிய சட்ட மன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளது.

புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியில் இடம் பெற்றிருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி தஞ்சை தொகுதியில் புதிதாக இடம் பிடித்துள்ளது.அதே போன்று நாகை பாராளுமன்றத் தொகுதியில் இடம் பெற்றிருந்த மன்னார்குடி தற்போது தஞ்சை பாராளுமன்றத் தொகுதியில் புதிதாக இடம் பிடித்துள்ளது.திருவோணம், பாபநாசம், வலங்கைமான் போன்ற தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

தஞ்சை பாராளுமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து சட்ட மன்றத் தொகுதிகளும் பொது தொகுதிகளே.தஞ்சாவூர் தொகுதியை காங்கிரஸும், திமுகவும் மாறி மாறி வென்றுள்ளன. காங்கிரஸ் 7 முறையும், திமுக 6 முறையும் வென்றுள்ளன. அதிமுகவுக்கு ஒரு முறை வெற்றி கிட்டியுள்ளது.

சட்டசபைத் தொகுதிகளைப் பொறுத்தமட்டில்,

ஒரத்தநாடு தொகுதியில் அதிமுகவின் வைத்தியலிங்கமும், தஞ்சாவூரில் திமுகவின் உபையதுல்லாவும், திருவையாறில் திமுகவின் துரை சந்திரசேகரனும், பட்டுக்கோட்டையில் காங்கிரஸின் ரங்கராஜனும், பேராவூரணியில் அதிமுகவின் வீரகபிலனும், மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவபுண்ணியமும் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த தேர்தல் நிலவரம்

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக) - 4,00,986.
தங்கமுத்து (அதிமுக) - 2,81,838.
வெற்றி வித்தியாசம் - 1,19,148 வாக்குகள்.

இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள்

1951 - ஆர்.வெங்கட்ராமன் -காங்
.1957 - ஆர்.வெங்கட்ராமன் -காங்.
1962 - வைரவத்தேவர் -காங்.
1967 - கோபாலர் - திமுக
1971 - எஸ்.டி. சோமசுந்தரம் - திமுக
1977 - எஸ்.டி. சோமசுந்தரம் - அதிமுக
1980- சிங்காரவடிவேல் - காங்.
1984 - சிங்காரவடிவேல் - காங்.
1989 - சிங்காரவடிவேல் - காங்.
1991 - துளசி அய்யா வாண்டையார் - காங்.
1996 - பழனிமாணிக்கம் - திமுக
1998 - பழனிமாணிக்கம் - திமுக
1999 - பழனிமாணிக்கம் - திமுக
2004 - பழனிமாணிக்கம் - திமுக

முதல் தேர்தல்

நடந்த ஆண்டு - 1951.
வென்றவர் - ஆர்.வெங்கட்ராமன் (காங்.)

நன்றி ; தட்ஸ் தமிழ்

எனது கருத்து

தஞ்சாவூர் தமிழ்நாட்டின் நெற்க் கழஞ்சியம் என்பார்கள். ஒரு காலத்தில் நாட்டிற்கே சோறு போட்ட மாவட்டமக்கள். இன்று சோற்றுக்கே கடையிலும் ரேசனிலும் தான் போய் நிற்க்க வேண்டியுள்ளது. ஏன் இந்த நிலை..?.

ஒன்று காவிரியில் தண்ணீர் வராதால் நீரின்றி பயிர் கருகிவிடும். இல்லை பருவ மழையால் வெள்ளம் வந்து பயிர் அழுகிவிடும். இது தான் நிலை..!. உடனே அரசாங்கம் கண்ணீர் விடும் விவசாயிக்கு கைக்குட்டை வாங்க பணம் கொடுக்கும். என்றாவது போலியான வாக்குறுதிகளை அல்லி வீசும் அரசியல்வாதிகள் நிரந்தர தீர்வுகான சிந்தித்ததுண்டா..?.

தொழிற்ச்சாலைகள் இல்லாத விவசாயம் ஒன்றையே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் மக்களை மறந்ததேன்..?. மேலும் இம்மாவட்டத்தில் தென்னை சாகுபடி அதிகமாக உள்ளதால் தென்னை சம்பந்தமான தொழிற்சாலைகள் கொண்டுவந்து இம்மக்களுக்கு மாற்று வழியைக் காட்ட நினைக்காதது ஏன்..?.

இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள். தேர்தல் சமயத்தில் கையை உயர்த்தி ஓட்டுக் கேட்க்கும் அரசியல்(வியாதி )வாதிகளே.. மக்களின் வாழ்க்கைத் தரத்தை எப்போது உயர்த்தப் போகிறீர்கள்..?.

சனி, 21 மார்ச், 2009

அமெரிக்காவின் கீழ்புத்தி...?

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மையபகுதியில் பரபரப்பான வியாபாரத்தளமான MID TOWN MAN HEATON ல் புதிய மதுபானவிடுதி ஒன்று திறக்க இருக்கிறார்கள். அதன் பெயர் APPLE MECCA. இது சவூதி அரேபியாவில் உள்ள உலக முஸ்லீம்களின் இறை இல்லமான கவ்பா (KAABA) வை போன்று வடிவமக்கப்பட்டுள்ளது.



இதில் இஸ்லாம் தடை செய்துள்ள மதுபானம் அருந்தும் (BAR) செயல்படப் பொவாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உலக முஸ்லீம்களின் மார்க்கமான இஸ்லாத்தை களங்கப்படுத்தும் அமெரிக்காவின் சதிசெயலுக்கு நியூயார்க்கில் உள்ள முஸ்லீம்கள் கடும் கண்டனம் தெரிவித்து இந்த மதுபான விடுதியை தடைசெய்ய போராடி வருகிறார்கள்.


அமெரிக்காவில் இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சியை பொருக்கமுடியாத புள்ளுருவிகள் "இஸ்லாம் தீவிரவாதம்" என்ற பரப்புறையை மேற்கொண்டார்கள். அதை பொருட்படுத்தாத அமெரிக்க பகுத்தறிவுவாதிகள்.
உன்மை மர்க்கமான இஸ்லாத்தை அதிகமதிகமாக தழுவினர். இதனால் இவ்வாறு கீழ்த்தரமான வேலையில் இறங்கிவிட்டார்கள்.

ஞாயிறு, 15 மார்ச், 2009

மலேஷியாவில் அன்னிய தொழிலாளர்கள் வெளியேற்றம்..?



கோலாலம்பூர்: வெளிநாட்டுத் தொழிலாளர்களை, குறிப்பாக இந்தியத் தொழிலாளர்களைத் திரும்பி அனுப்பும் 'திருப்பணி'யை மலேஷியாவும் தொடங்கிவிட்டது. இதன் முதல்கட்டமாக மலேஷியாவில் பணியாற்றும் இந்திய, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வரி மற்றும் இன்சூரன்ஸ் தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது மலேஷிய அரசு. இந்தத் தகவலை மலேஷிய மனித வளத்துறை அமைச்சர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுப்பிரமணியம் மேலும் கூறியதாவது:

மலேசியாவில் தோட்டத் தொழில், கட்டுமானத் தொழில் மற்றும் சேவைத் துறைகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்ந்து அனுமதிகக்கப்படுவார்கள். ஆனால் இவை தவிர்த்த பிற துறைகளில் படிப்படியாகக் குறைக்கப்படும். உள்ளூர் தொழிலாளர்களுக்கே அதிக முக்கியத்துவம் தருவோம். அடுத்த ஆண்டுக்குள் இப்போதுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர் எண்ணிக்கையை 5 லட்சமாகக் குறைத்து விடுவோம். மலேஷியாவில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி இங்குள்ள வெளிநாட்டுத் தொழிலாளர் எண்ணிக்கை மட்டும் 22 லட்சம். இது சட்டப்பூர்வ கணக்கெடுப்புதான். சட்டவிரோதமாக உள்ளவர் எண்ணிக்கை 10 லட்சம். இந்த 32 லட்சம் தொழிலாளர்களை 5 லட்சமாகக் குறைப்பதே இப்போது அரசின் முன் உள்ள சவால். அதற்காகத்தான் வரியை அதிகமாக்கியுள்ளோம். மாதம்தோறும் 30 ஆயிரம் பணியாளர்களின் வொர்க் பர்மிட்டுகள் காலாவதியாகின்றன. ஆனால் இவற்றைப் புதுப்பிப்பதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை 3 லட்சம் பணியாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, அக்டோபர் 1-ம் தேதி முதல் மலேசியத் தொழிலாளர்கள் 28,000 பேர் வேலைகளை இழந்துள்ளனர். மேலும், ஒரு லட்சம் மலேசியர்கள் தாற்காலிகமாக வேலையை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

வேலை அளிக்கும் சில தொழில் அதிபர்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்கள் தினமும் 12- 24 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். இதன் காரணமாகவே உள்நாட்டுத் தொழிலாளர்கள் வேலையிலிருந்து வெளியேற வேண்டியுள்ளது.ஆனால் இந்தியா, வங்கதேசம், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலிருந்து மலேசியாவுக்கு வந்து பணியாற்றும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தினமும் 10 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றுகின்றனர். இதனால்தான் முதலாளிகள் மலேஷியர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை. இந்திய உணவகங்களில் உள்நாட்டுத் தொழிலாளர்களைப் பயன்படுத்த முடியும். இருப்பினும், சமையல் உள்ளிட்ட வேலைகளுக்கு இந்தியாவிலிருந்துதான் தொழிலாளர்களை வரவழைக்கின்றனர் என்றார் சுப்பிரமணியம்.

தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு: மலேசிய அரசின் இந்த புதிய முடிவுக்கு மலேஷிய உணவகங்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மலேசிய முஸ்லிம் உணவகங்களின் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜமருல்கான் காதிர் கூறுகையில், அரசின் இந்த முடிவால், இந்திய முஸ்லிம்கள் மற்றும் சீனர்களால் நடத்தப்படும் 25,000 உணவகங்களில் பணியாற்றும் 3.75 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களும், உள்நாட்டுத் தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது உள்நாட்டுத் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர். எங்களது உணவகங்களுக்குத் தேவையான பொருள்களை வழங்குபவர்களும் பாதிக்கப்படுவர். உணவகத் தொழில் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கியது. வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான வரியை இரண்டு மடங்கு செலுத்துவதோடு, அவர்களுக்கான மருத்துவ விசா கட்டணம், இன்சூரன்ஸ் தொகையும் செலுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.

மலேஷியாவில் உள்ள இந்திய உணவகங்கள் சங்க தலைவர் ராமலிங்கம் பிள்ளையும் மலேஷிய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மலேஷிய அரசின் இந்த முடிவால் பெருமளவு பாதிக்கப்படுவோர் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்களே என்பது குறுப்பிடத்தக்கது.

தொழிலாளர் கூற்று: லெவிக் கட்டணம் 1800 ல் இருந்து 3600 ஆக மாற்றிய அறிவிப்பு எங்கள் தலையில் விழுந்த பேரிடி. இன்னும் இதில் பல மறைமுக கட்டனங்களும் சேர்த்தால் நாங்கள் செழுத்தவேண்டிய மொத்த தொகை 4000 த்தை தாண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால். அன்னிய தொழிலாளர்களின் அனைத்து கட்டனங்களையும் உணவக உரிமையாளர்களே செழுத்துவதாக அரசாங்கம் என்னிக்கொண்டுதான் இவ்வாறு கட்டணத்தை உயர்த்தினால் ஆட்குறைப்பு செய்துவிடுவார்கள் என்று உயர்த்துகிறது. நான் கேட்பது என்னவென்றால் எந்த ஒரு முதலாளியாவது அரசாங்கம் கூருகின்ற சலுகைகளை செய்கிறார்களா...?.

ஒரு உணவக தொழிலாளியின் அடிப்படை சம்பளம் 600 ரிங்கிட் முதல் 900 ரிங்கிட் வரைதான். அதில் அவன் பர்மிட்டிற்கு மட்டும் மாதம் 333 ரிங்கிட் எடுத்துவைக்க வேண்டும். மீதித் தொகையில் அவன் அடிப்படை சிலவுகள் போக அவனையே நம்பியுள்ள குடும்பத்துக்கு எவ்வளவு அனுப்புவான் என்பதை நீங்களே கணக்குப் பண்ணிக்கொள்ளுங்கள்.

இதே உள்ளூர் தொழிலாளியாக இருந்தால் ஊதியத்துடன் காப்பீட்டுத்தொகை மற்றும் சேமநிதி ஆகியவை கொடுக்க வேண்டிவரும். அவர்கள் 12,13 மணி நேரம் எல்லாம் வேலை பார்க்கமாட்டார்கள். அன்னிய தொழிலாளர்களை அடிமைகள் போல் நடத்தலாம். நாம் என்ன செய்தாலும் கேட்க ஆள் இல்லை என்பதற்காகவே முதலாளிகள் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்களே தவிற தொழிலாளர் மீது உள்ள அக்கரையினால் அல்ல. "போடா" என்று சொல்லாமல் "நான் போகிறேன்" என்று சொல்ல வைக்கிறது அரசாங்கம்.


வியாழன், 5 மார்ச், 2009

இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்



"இர்குன்", "ஹகானா" யூத பயங்கரவாத குழுக்களால் 1948 ல் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல் அண்மையில் 60 வது சுதந்திரதினத்தை கொண்டாடியது. 1946, ஜெருசலேம் நகரின் "கிங் டேவிட்" ஹோட்டேல் யூத பயங்கரவாத இயக்கமான இர்குனினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச ஊழியர்கள் உட்பட 90 பேர் மரணமடைந்தனர். அப்போது பாலஸ்தீனம் என்ற பெயரில் இருந்த பெருநிலம் பிரிட்டிஷ் பாதுகாப்பு பிரதேசமாகவிருந்தது. அரேபியர்கள் அதிகமாக வசித்த நாட்டில், புதிதாக யூத குடியேறிகள் ஆயிரக்கணக்கில் வந்திறங்குவதை, அன்றைய காலனியாதிக்க பிரிட்டன் விரும்பவில்லை. பல அகதிக்கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பாலஸ்தீனத்தில் மேற்குறிப்பிட்ட யூத தீவிரவாத இயக்கங்கள், பிரிட்டிஷ் இலக்குகள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டனர். அப்போது பிரிட்டன் அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது. இஸ்ரேல் விடுதலைப் போராட்டம் என்பது, ஒரு சில பயங்கரவாத இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் மட்டுமே என்பதும், பயங்கரவாதிகள் வெற்றிகரமாக இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கிக் காட்டினர் என்பதும் இன்று பலருக்கு ஆச்சரியமடைய வைக்கும் செய்தி தான். அதுமட்டுமா? முன்னாள் இர்குன் பயங்கரவாத தலைவர் தான் பின்னர் இஸ்ரேலின் முதல் பிரதமர் "மேனகிம் பெகின்" !
இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாபிக்கப்பட்டதும், மேலும் பல பயங்கரவாத தாக்குதல்கள், இம்முறை அரபு பொதுமக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டன. பல அரேபிய கிராமங்கள் இர்குன், மற்றும் ஸ்டேர்ன் கங் காடையர்களால் சுற்றிவளைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த வெறியாட்டம் பற்றிய செய்திகள் பிற அரபு கிராமங்களுக்கும் பரவவே, ஆயிரக்கணக்கான மக்கள், ஜோர்டானுக்கும், லெபனானுக்கும், எகிப்துக்கும் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். அப்படி இடம்பெயர்ந்த அரேபியரின் வீடுகள், நிலங்கள், ஐரோப்பாவில் இருந்து வந்த யூத குடியேறிகளுக்கு வழங்கப்பட்டன. இவ்வாறு இஸ்ரேல் என்ற தேசம், பாலஸ்தீனியர்களிடம் இருந்து திருடப்பட்ட நிலங்களின் மீது உருவானது. இதனால் தற்போதும் இஸ்ரேல் சுதந்திரதினம் கொண்டாடும் அதே காலத்தில், பாலஸ்தீனர்கள் "தேசிய பேரழிவு" என்று துக்கதினமாக அனுஷ்டிக்கின்றனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரண்டு தேசங்களின் உருவாக்கத்திற்கு ஐ.நா. மன்றம் அனுமதி வழங்கிய போதும், அயல்நாட்டு அரேபியர்களின் படையெடுப்பை இஸ்ரேலிய படைகள் முறியடித்ததை சாட்டாக வைத்து, பாலஸ்தீன பிரதேசங்கள், இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. இன்று வரை தொடரும் இந்த ஆக்கிரமிப்பின் போது, மெல்ல மெல்ல அரபு நிலங்கள் அபகரிக்கப்படுவதும், அங்கே யூத குடியேற்றங்கள் உருவாவதும் 60 ஆண்டு கால தொடர்கதை. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட "அபார்ட் ஹைட்"(பிரித்து வைத்தல்) என்ற பாகுபாடு, இன்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நிலவுகின்றது. உதாரணமாக, இரண்டு அரபு கிராமங்களுக்கு இடையில் ஒரு யூத கிராமம் உருவாகும். அங்கே அனைத்து வசதிகளுடனும் நவீன குடியிருப்புகள் கட்டப்பட்டு, எங்கிருந்தோ வரும் யூத குடும்பங்களுக்கு வழங்கப்படும். அங்கேயே பாடசாலை, மருத்துவமனை போன்ற வசதிகளுடன், பிற இஸ்ரேலிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் என்பன, சர்வதேச சட்டங்களுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் பாதுகாப்புக்கு ஆயுதங்களையும் அரசாங்கமே கொடுக்கும். அதேநேரம் அரபு கிராமங்கள் கவனிப்பாரற்று பாழடைந்து செல்லும். பூர்வீக பாலஸ்தீன அரேபியர்கள், அயல் கிராம யூத விவசாயிகள் அடாத்தாக பறித்தெடுத்த நிலங்களில், அதாவது தமது சொந்த நிலங்களிலேயே கூலியாட்களாக வேலை செய்யும் பரிதாபம். குறைந்த ஊதியம் வழங்கி அவர்களின் உழைப்பை சுரண்டும், யூத கமக்காரர்கள் தமது உற்பத்திபொருட்களை ஏற்றுமதி செய்து அதீத லாபம் சம்பாதிக்கின்றனர். வேலையில்லா பிரச்சினை அதிகரித்தாலும், நகரங்களுக்கு வேலை தேடி செல்வதை, இஸ்ரேலிய படைகளின் வீதித்தடைகள் தடுக்கின்றன. மேலும் வரட்சி காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு, பாலஸ்தீன கிராமங்களை மட்டுமே வெகுவாக பாதிக்கின்றது.
மேற்குறிப்பிட்ட அவலநிலை தான் பல பாலஸ்தீன இளைஞர்களை தீவிரவாத இயக்கங்களை நோக்கி தள்ளும் காரணிகள். அவர்களை பொறுத்தவரை தினசரி அவமானப்பட்டு வாழ்வதை விட சாவது மேல் என்ற நிலைமையே, பல தற்கொலை போராளிகளையும் உருவாக்குகின்றது. மாறாக வெளியில் பிரச்சாரப்படுத்தப்படுவதை போல மூளைசலவை செய்யப்படுவதால் அல்ல. இந்த காரணிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாலேயே, இஸ்ரேல் கடந்த அறுபது வருட காலமாக முடிவுறாத யுத்தங்களுக்குள் தப்பிப்பிழைக்க வேண்டி உள்ளது.

மிக உன்னிப்பாக அவதானித்தால், ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கம் இஸ்ரேல் என்ற வடிவில் 21 ம் நூற்றாண்டிலும் தொடர்வதை காணலாம். அதன் வரலாற்றை பார்த்தாலே புரியும். முதலாம் உலகயுத்த முடிவில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்த பாலஸ்தீனத்தில், மிகக் குறைந்த அளவு அரபு மொழி பேசும் யூதர்கள் வாழ்ந்து வந்தனர். அதே காலகட்டத்தில் ரஷ்யா, மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து கணிசமான அளவு யூத குடும்பங்கள் வந்து குடியேறி இருந்தன. அவர்கள் பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் இருந்து காணிகளை வாங்கி கூட்டுறவு முறையில் அமைந்த விவசாய கிராமங்களை உருவாக்கினர். அப்போது ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் கம்யூனிச சித்தாந்தம் செல்வாக்கு செலுத்தியதால், இந்த யூதர்களும் தமது மாதிரி கிராமங்களை கம்யூனிச அடிப்படையிலேயே உருவாக்கினர். அதாவது அங்கே கூட்டுறவு பண்ணைகளில் வேலை செய்த அனைவரும் சமமாக நடத்தப்பட்டனர். பண்ணை நிர்வாகிக்கும், தொழிலாளிக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட்டது. கிடைத்த லாபம் அனைவருக்கும் பங்கிட்டு கொடுக்கப்பட்டது. பெற்றோர்கள் வேலைக்கு போகும் நேரம், குழந்தைகள் போது காப்பகத்தில் பராமரிக்கப்பட்டனர். தற்போது இஸ்ரேலிய தேசிய நீரோட்டத்தில் கலந்த பிறகு, இந்த பண்ணைகள் யாவும் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு விட்டன. இத்தகைய பொதுவுடைமை மாதிரிக்கிராமங்களில் வாழ்ந்த யூதர்கள் இஸ்ரேல் என்ற தேசம், அபகரிக்கப்பட்ட மாற்றான் மண்ணில் உருவாக வேண்டும் என்று நினைக்கவில்லை. அதை நடைமுறைப்படுத்தியவர்கள் மேற்கு ஐரோப்பிய யூதர்கள்.
இரண்டாம் உலக யுத்தம் முடிந்து, ஹிட்லர் யூத மகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த கதைகள் உலகம் முழுவதும் அனுதாபத்தை தோற்றுவித்த நேரம், "சியோனிஸ்டுகள்" எனப்படும் யூத தேசியவாதிகள், மேற்குலக நாடுகளின் உதவியுடன் போரில் தப்பிய யூத அகதிகளை கப்பல்களில் ஏற்றிக்கொண்டு பாலஸ்தீனம் நோக்கி சென்றனர். அவர்கள் கண்ணில் இஸ்ரேல் தேசம் பற்றிய கனவு இருந்தது. ஆனால் அவர்கள் சென்ற இடம் யாருமே வாழாத வெறும் கட்டாந்தரையாக இருக்கவில்லை. அங்கே காலம்காலமாக வாழ்ந்து வந்த அரபு பாலஸ்தீன மக்களை அடித்து விரட்டியிருக்கா விட்டால், அவர்களின் நிலங்களைப் பறித்து யூதர்களை குடியிருத்தியிருக்காவிட்டால், அன்று இஸ்ரேல் என்ற தேசம் சாத்தியமாகியிருக்க மாட்டாது. ஏற்கனவே எமக்கு தெரிந்த உதாரணம் வரலாற்றில் உள்ளது. இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு கப்பல்களில் சென்ற ஆங்கிலேயர்கள், அங்கே பூர்வீக செவ்விந்தியரின் நிலங்களை பறித்து, அங்கே ஆங்கிலேய காலனிகளை உருவாக்கி, பின்னர் அவற்றை இணைத்து "அமெரிக்கா" என்ற தேசம் பிரகடனம் செய்தனர்.

நன்றி: "கலையகம்" கலையரசன்.

புதன், 4 மார்ச், 2009

பாலஸ்தீன் விடியல் எப்போது..?


அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் இருந்து குடியேறிய யூத காலனியவாதிகளால் பாலஸ்தீன நிலங்கள் அபகரிக்கப்பட்டு, அங்கு வாழ்ந்த மக்கள் அகதிகளாக விரட்டப்பட்டு, எஞ்சியவர்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் அவலநிலையை பிரபல பிரிட்டிஷ் ஊடகவியலாளர் John Pilger ஒரு முழுநீள ஆவணப்படமாக பதிவுசெய்துள்ளார். உலக வல்லரசு அமெரிக்காவை தன் பக்கத்தில் சேர்த்துக் கொண்ட இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை, தமக்கு கிடைக்கும் வளங்களைக் கொண்டு எதிர்த்து போராடும் பாலஸ்தீன மக்களின் விடுதலை உணர்வை தத்ரூபமாக பிரதிபலித்துள்ளார். சில இஸ்ரேலிய சமாதான விரும்பிகளும், பாலஸ்தீன மக்களுடன் இணைந்து போராடுவதையும் இந்த ஆவணப்படம் குறிப்பிடத் தவறவில்லை

(இந்த இனைப்பில் சொடுக்கி ஆவனப் படத்தைக்காணவும்)

http://video.google.com/videoplay?docid=1259454859593416473&hl=en