சனி, 2 அக்டோபர், 2010

அயோத்தி தீர்ப்பு…???

"இருதரப்பும் சேர்ந்து வாழ்வதை அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது” என்கின்றனர் பலரும் அயோத்தி தீர்ப்பு குறித்து. பி.ஜே.பி, சாதுக்கள், பஜ்ரங்கதள், வி.எச்.பி மிகுந்த உற்சாகத்தோடு தீர்ப்பை வரவேற்று கொண்டாடிகின்றனர். ‘ ராமருக்கு கோவில் கட்டுவதற்கான வழி பிறந்துவிட்டது’ என்றும், ‘தேசீய ஒருமைப்பாட்டிற்கு புதிய அத்தியாயத்தை இந்த தீர்ப்பு எழுதியிருக்கிறது’ என்றும் அத்வானி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்று அறிக்கை விட்டிருக்கின்றனர். "அயோத்தியில் பிரம்மாண்டமான கோவில் கட்டப்படும்” என பிரவீன் தொகாடியா ஆனந்தக் கூச்சலிடுகிறார். காங்கிரஸ் கட்சி புன்னகையோடு, “தீர்ப்பை இருதரப்பாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என சொல்லி வருகிறது. மூஸ்லீம் அமைப்புகள் தீர்ப்பீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்லப்போவதாக சொல்கின்றன. தீர்ப்பின் உள்ளடக்கத்தையும், சாதக பாதகங்களையும் இந்தக் காட்சிகளும் செய்திகளும் சொல்கின்றன.

‘முப்பரிமாண தீர்ப்பு’ என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற தீர்ப்புகளை எழுதியிருக்கிற மாண்புமிகு நீதிபதிகள் மூவருமே ஒத்துப்போன கருத்தைத் தேடிப் பார்க்க வேண்டியிருக்கிறது. அகர்வால், ஷர்மா இருவரும் மசூதிக்கு முன்பாக அங்கு ராமர் கோவில் இருந்ததற்கான அடையாளம் இருந்ததாக சொல்கின்றனர். அதனை இடித்து மசூதி கட்டப்பட்டதாக முடிவுக்கு வருகின்றனர். நீதிபதி கானோ, மசூதிக்கு முன்பாக அங்கு ஏற்கனவே இடிந்த அல்லது சிதைந்த கட்டிட அடையாளங்களை அறிய முடிவதாகவும், கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் சொல்கின்றார். கான் மற்றும் அகர்வால் இருவரும் நிலத்தை மூன்றாக பிரித்து பங்கு வைக்கச் சொல்கின்றனர். ஷர்மா முழுவதையும் இந்துக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். நீதிபதிகளின் வித்தியாசமான இந்த பார்வைகளில் இருந்த ‘மெஜாரிட்டிகளை’யெல்லாம் சேகரித்து பாபர் மசூதி - ராம ஜென்மபூமி விவகாரத்தின் தலையெழுத்துக்கள் எழுதப்பட்டு இருக்கின்றன.

“தேவதைகள் தரையிறங்கி நடப்பதற்கு அஞ்சுமளவுக்கு, பிரச்சினைக்குரிய நிலத்தில் கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டு இருக்கின்றன. அதனை எங்களால் முடிந்த அளவுக்கு நீக்க முயன்றிருக்கிறோம்” என்று தீர்ப்பினை எழுத ஆரம்பித்திருக்கிறார் நீதிபதி கான். பிரபஞ்சத்தின் அழிவு மற்றும் மறு ஆக்கம் குறித்த ரிக்வேதங்களின் சுலோகங்களை மேற்கோளிட்டு தீர்ப்பினை எழுத ஆரம்பித்திருக்கிறார் நீதிபதி அகர்வால். மொத்தம் நீளும் தீர்ப்பின் 6000 பக்கங்களில் இந்த அகர்வால் மட்டும் கிட்டத்தட்ட 5000 பக்கங்கள் எழுதியிருக்கிறார். இந்த பின்னணியில் வாசிக்கும்போது தீர்ப்பின் நிறம் தெளிவாகிறது. தீர்ப்பின் திசை இங்கிருந்து நகர ஆரம்பிக்கிறது.

சர்ச்சைக்குரிய இடத்தில், முதலில் கோயில் இருந்ததாகவும் அதை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதாகவும், இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் ஆவணங்களின் மூலம் அது நிரூபணமாகியுள்ளதாகவும் நீதிபதிகள் அகர்வாலும், ஷர்மாவும் தெரிவித்துள்ளனர். அகழ்வராய்ச்சியில் பாபர் மசூதிக்குக் கீழே அங்கு ஏற்கனவே இருந்த ஒன்றின் சிதிலங்களில் தூண்கள் போன்றவை இருப்பதாகவும், வர்ணப்பூச்சுக்கள் தெரிவதாகவும், பல விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. அந்த சிதிலங்களில் தேவனகிரி எழுத்து வடிவம் தெரிவதாகவும் சொல்லப்பட்டது. அராபிய எழுத்துக்கள் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. இந்து அமைப்புகளோ, அப்போதே “ஆஹா, அது ராமர் கோவில்தான் என்றும், 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும்” கும்மாளம் போட்டு பரப்பின. ஜைன மதத்தைச் சேர்ந்த ஒரு அமைப்பு, அந்த சிதிலங்கள், தங்கள் மதத்தைச் சார்ந்தவை போலிருப்பதாகவும், எனவே தங்களுக்கு அந்த இடத்தில் உரிமையுண்டு என ஒரு மனு தாக்கல் செய்தனர். அதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதற்கிடையில் அயோத்தியில் அகழ்வராய்ச்சி நடத்திய குழு, அகழ்வராய்ச்சியின் விதிகளை பின்பற்றவில்லை என பணிகளை நிறுத்தவும் நேரிட்டது. பல வரலாற்று ஆசிரியர்கள், அகழ்வராய்ச்சியின் அறிக்கை மீதான ஏராளமான சந்தேகங்களை எழுப்பி இருந்தனர்.

இத்தனை குழப்பங்களுக்கும் தெளிவற்றத் தன்மைகளுக்கும் மத்தியில் நீதிபதிகள் ஷர்மாவும், அகர்வாலும் திட்டவட்டமாக தங்களுக்குத் தேவையான சில அடையாளங்களை தேர்ந்தெடுத்து அது ராமர் கோவில்தான் என முடிவுக்கு வந்து தங்களது ‘நம்பிக்கை’யை நிலைநாட்டி இருக்கின்றனர். அகழ்வராய்ச்சியில் கட்டிட அமைப்பின் சிதிலங்கள் மட்டும் காணப்படவில்லை. மிருகங்களின் எலும்புக்கூடுகளும் காணப்பட்டு இருந்தன. இதுகுறித்து எழும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு இருந்தன. ‘மிருகங்களை காணிக்கை செலுத்தும் வழக்கம் இந்துக்களிடம் இருந்ததற்கான’ ஆதாரங்களை பழம் இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி அர்த்தம் சொல்லி இருக்கின்றனர் நீதிபதி அகர்வாலும், ஷர்மாவும். அவர்கள் இருவரும் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றனர்.

ஆக, அங்கு ஏற்கனவே ஒரு இந்துமதக் கோவில், அதுவும் ராமர் கோவில் இருந்த முடிவுக்கு கொண்டு வந்தாயிற்று. அடுத்த கட்டத்துக்கு அல்லது பணிக்கு தாவுகின்றனர். ‘கோயிலை இடித்துவிட்டு மசூதியைக்கட்டியது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதால் அதை மசூதியாகக் கருத முடியாது’ என்கின்றனர். இந்துமதம் மட்டுமல்ல முஸ்லீம் மதக் கோட்பாடுகளும் அத்துப்பிடிதான் போலும். ஆனாலும் இந்த இடத்தில் யாரோ திருதிருவென விழிப்பது மாதிரி இருக்கிறது. கோவில் இடிக்கப்பட்டதா, யார் இடித்தது என்பதற்கான எந்த ஆதாரங்களும், சான்றுகளும் நிறுவப்படாமலே ‘கோவில் இடிக்கப்பட்டது’ என்று போகிற போக்கில் சொல்லிக் கடந்து விடுகிறார்கள். இதற்கு மேற்கோள்காட்ட வேதங்களிலோ, உபநிடதங்களிலோ, பழம் இலக்கியங்களிலோ வார்த்தைகள் எதுவும் அகப்படவில்லை போலிருக்கிறது. அதற்கென்ன. கோவில் இருந்தது என்றாகி விட்டது. மசூதியே இல்லை என்றுமாகிவிட்டது.

பாபர் தன்மகன் ஹுமாயூனுக்கு எழுதிய உயில்.

கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”

பாபரின் இந்த உயில் மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும். மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை. ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை. இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.

இனி அடுத்த கட்டம் ஒன்றிருக்கிறது. சகிப்புத்தன்மையையும், தேசீய ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தியாக வேண்டும். அதற்கு வழி காட்டப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கு பங்கு வைத்து கொடுக்க வேண்டும் என்கிறது தீர்ப்பு. கரசேவை, மசூதி இடிப்பினை அடுத்து அயோத்திப் பிரச்சினையின் அடுத்த அத்தியாயமாய் இந்தத் தீர்ப்பு எழுதப்பட்டு இருக்கிறது. இதுவே கடைசி அத்தியாயமாய் இருக்க வேண்டுமென ஆசைப்படுகின்றனர். கலைஞர் கருணாநிதியும், செல்வி.ஜெயலலிதா அவர்களும் கூட இவ்விஷயத்தில் இணக்கமான கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

முஸ்லீம் அமைப்புகள் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வது என்று அறிவித்தவுடன், இந்துமகாசபையும் ‘முஸ்லீம்களுக்கு ஒரு பங்கு கூடக் கிடையாது’ என கோர்ட்டுக்குச் செல்லப்போவதாக சொல்லி இருக்கிறது. இருதரப்பினரையும் பா.ஜ.கவும், காங்கிரஸும் சமாதானப்படுத்தி, மேல்முறையிட்டிற்கு செல்லவிடாமல் தடுக்க முயற்சிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றன என்பது இன்றைய செய்தி. பெரும்பான்மையின் அரசியல் இதோ ஆரம்பிக்கிறது. இந்துமகாசபையை மேல்முறையீடு செல்லவிடாமல் சமாதானப்படுத்தி, “நீயும் சமாதானமாகப் போ’ என முஸ்லீம் அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படும். அதற்குப் பிறகும் தங்கள் உரிமையை நிலைநாட்ட முஸ்லீம் அமைப்புகள் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றால் அவர்கள் தேச ஒருமைப்பாட்டிற்கும், சகிப்புத்தன்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கு எதிரானவர்கள் என்பதாக பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படும். இந்து மனோபாவத்தில், முஸ்லீம் எதிர்ப்புணர்வும், வெறுப்பும் மேலும் வார்க்கப்படும். “என்ன இழவோ. பிரச்சினை முடிந்தால் சரி” என்று அமைதி விரும்புவர்களும் முஸ்லீம் சமூகத்தின் மீது அதிருப்தியடைவார்கள்.

தீர்ப்பில் சொல்லப்படுகிற யோசனையையே இருவரும் ஏற்றுக்கொள்ளட்டும். ராமர் கோவில் கட்டட்டும். மசூதியை கட்டட்டும். அல்லது இரண்டுமே கட்டாமல் போகட்டும். அதுவெல்லாம் பிரச்சினையல்ல. அங்கே ராமர் கோவில் இருந்தது என்றும் அது இடிக்கப்பட்டது என்றும், அதன் மீது மசூதி கட்டப்பட்டது என்றும் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாய் இந்த தேசத்தில் ஒரு தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதுதான் பிரச்சினை. நாளை ராமர் பாலத்துக்கும் இந்த தீர்ப்பே முன்மாதிரியாகலாம். சேது சமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போட வேண்டியதுதான். தொடர்ந்து இந்துமதக் கடவுள்கள் ஒவ்வொன்றாய் ஆழங்களிலிருந்துக் கிளம்பி வந்து தேசத்தை உலுக்கிக்கொண்டே இருக்கும். அதுதான் பிரச்சினை. இதை சரிசெய்ய வேண்டியது இந்த தேசத்தின் பிரஜைகள் அனைவரின் கடமை. முஸ்லீம் மக்களுடையது மட்டும் அல்ல.

“மக்களின் நன்மைக்காக இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்பது தவறு. தங்கள் ஆட்சியை நிரந்தரமாக்கிக்கொள்ள விரும்புகிறவர்கள் இந்த நீதிமன்றங்கள் மூலம் அதைச் செய்து வருகின்றனர்”. இப்படி ‘இந்திய சுயராஜ்ஜியம்’ என்னும் நூலில் சொல்லியிருப்பவர் மகாத்மா காந்தி. இன்று அவரது பிறந்த நாள். மனதில் இருத்துவோம்.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

பெண் தற்கொலை: கணவர் உள்பட 4 பேர் மீது புகார்

பேராவூரணி,ஆக. 23: பேராவூரணி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது கணவர் உள்பட 4 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பேராவூரணி அருகேயுள்ள பத்துக்காட்டைச் சேர்ந்தவர் நைனாமுகமது மகன்
அஜ்மீர் அலி (28) இவருக்கும், ஈரோடு மாவட்டம், ஐங்கேனிகோரையைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் மகள் வாவாம்மாள் (24) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ரம்ஜானுக்கு சீர் கொடுப்பதற்காக ஈரோட்டிலிருந்து வாவாம்மாளின் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை பத்துக்காடு வந்தனர். அப்போது சீர்வரிசை குறைவாக உள்ளதாகக் கூறி, அஜ்மீர் அலி குடும்பத்தினர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த வாவாம்மாள் திங்கள்கிழமை காலை வீட்டில் தனியாக இருந்த போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்துல் அஜீஸ் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரில் தனது மகள் சாவுக்கு மாமியார் முகமது பீவி மாமனார் நைனாமுகமது, கணவர்
அஜ்மீர் அலி, நாத்தனார் நூர்ஜகான் ஆகியோர்தான் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸர் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

நன்றி : தினமணி

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

மரண அறிவிப்பு

கரிசவயல் (பத்துக்காடு) நெய்னாமுகமது (வழுக்கமண்டை) அவர்களுடைய இளைய மகன் அஜ்மிருடைய மனைவி வாவாம்மா இன்று அதிகாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது வரதட்டனை கொடுமையால் நடந்திருக்கலாம் என்று போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆறுமாதத்திற்க்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது நமது ஊரிலேயே நடந்திறாத ஒரு சம்பவம் ஆகும். பரக்கத்தினுடைய மாதமான ரமழானில் இப்படி ஒரு சோக நிகழ்வு ஊரையே சோகத்தில் உறைய வைத்திருக்கிறது. பொருத்திருந்து பாப்போம் யார் குற்றவாழி என்று...?. அல்லாஹ் மிகப் பெரியவன்.

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

இணையம் வழி இஸ்லாமிய பாடத்திட்டம். www.islahme.com

இன்னும் இருவாரங்களில் ஆரம்பமாகவுள்ள ரமழான் மாதத்தை முன்னிட்டு இஸ்லாஹ் என்ற அமைப்பு எதிர்வரும் புனித றமழான் மாதத்தில் முஸ்லிம் மக்களது நன்மை கருதி இணையம் மூலம் பாடத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

முதலாவது நோன்புடன் ஆரம்பமாகும் இக் கற்கை நெறி 24 நாட்களுக்கு 12 பாடங்களைக் கொண்டதாக இருக்குமென அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘அல்குர்ஆனை அணுகும் முறை' என்ற இப்பாடத்திட்டத்திற்கான வழிகாட்டல்களை ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.ஸீ.அகார்முஹம்மத் (நளீமி) நெறிப்படுத்துவார். பாடநெறி முடிவில் சித்தியடைந்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை என்ற இணையத்தளதில் http://www.islahme.com/ பெறலாம்.

ஞாயிறு, 25 ஜூலை, 2010

இதற்கு யார் பொருப்பு..?

எதற்கு என்று கேட்காதீர்கள்..... உலகின் அனைத்து நிகழ்வுகளுக்கும் நாமும் ஒருவகையில் காரணம். இருப்பவனிடம் இருந்து எடுத்து இல்லாதவனிடம் கொடுக்கும் ராபின் வுட் என்ற களவானியை ஒரு கதாநாயகனாக பார்க்கும் நாம்
ஏன்..? கதநாயகனாக மாறக்கூடாது.
இது என்னடா வம்பாப் போச்சி அப்ப களவாட சொல்றீகளான்னு கேட்காதீர்கள். அது தெருதேங்காயை எடுத்து வழிப் புள்ளயாருக்கு உடைத்த கதை போல் ஆகிவிடும். ஆகவே அதன் கருப்பொருளான இருப்பவன் இல்லாதவன் என்ற கருத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
அதாவது அடுத்தவனை விட நம்மிடம் சற்று கூடுதலாக இருக்கும் பட்சத்தில் நாம் ஏன் அந்த அடுத்தவனுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்யக்கூடாது. தேடித்திரிந்துதான் உதவி செய்யவேண்டும் என்பது இல்லை. ஒவ்வொருவரும் நம்மை சுற்றியுள்ளவர்களை பார்த்துக்கொண்டாளே.! ஒரு தெரு, ஒரு ஊர்,வட்டம், மாவட்டம்,மாநிலம்,நாடு உலகமே , இன்புற்றிருக்கும்.
நாமே கொடுக்க முன்வரும்பொழுது அங்கு ஒரு ராபின்வுட்டுக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. நாம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு உணவுப் பொருட்களை நாம் ஒன்று இருக்கும்போது உப்பில்லை காரமில்லை என்று வீனடித்து கொட்டிவிட்டு இன்னொன்றை சாப்பிடுகிறோம். அந்த உப்பில்லா உணவுகூட இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலையும் எத்தனை மனிதர்கள் செத்து மடிகிறார்கள் தெரியுமா...?.
இதை எழுதும் நான் கடையேழு வள்ளலும் இல்லை உங்களை வள்ளலாக சொல்லவும் இல்லை.
நீ ஒரு கை சோற்றை கொட்டும் முன் இதற்காக ஏங்குபவற்களை மனதில் கொண்டாலே.... பசியால் வாடும் வயிருகலே இல்லை என்ற நிலை வந்துவிடும்.
என்னை பாதித்தது உங்களையும் பாதிக்கட்டுமே....!!










இதற்கு நேர்மாறாக உள்ள சில படங்கள்

இதில் அரபுக்கள் மட்டும்தான் குற்றவாளிகளா..?. அடுத்தவன் பசித்திருக்க நாம் மட்டும் புசித்துவிட்டு மிச்சத்தை வீனடித்தால் நாமும் குற்றவாளிதான்..!

இதில் உள்ள படங்கள் போல் ஆப்ப்ரிக்காவில் மட்டும் மக்கள் பசியால் மடிவதில்லை. நம் நாட்டிலும் தான்.
உதவிக்கு மதம், ஜாதி, மொழி,பார்க்காமல் மனிதநேயத்துடன் நடந்தால் மனுடம் செழிக்கும்.

ஞாயிறு, 16 மே, 2010

மரண அறிவிப்பு

கரிசவயல் (பத்துக்காடு). H.கலந்தர்,அபுல் ஹசன், அவர்களுடைய தகப்பனார். சே.ஹபீப் ரஹ்மான் அவர்கள் (16/5/2010) வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"). எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.ஆமீன்.

வியாழன், 13 மே, 2010

குட்டிக்கதைகள்

ஒருவர்:வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.

மற்றவர்: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?

ஒருவர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

மற்றவர்: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.

ஒருவர்: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

மற்றவர்: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

ஒருவர்: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.
மற்றவர்: எப்படிச் சொல்றீங்க?

ஒருவர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பாவும் வித்தியாசம் தெரியாது.!
............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......
............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ........

ஒரு அரசனிடம் சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான்.ஒரு நாள் அரசன் அவனுடன் வெளியூர் சென்றான்.வழியில் இருட்டி விட்டது.எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து, குதிரையைவெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு,வேலைக்காரனிடம்,இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க,அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் தூக்கம் வராது என்றார்.அவனும் சரி என்றான்.சிறிது நேரம் கழித்து அரசர்,அவன் என்ன செய்கிறான் என்பதை சோதிக்க வெளியே வந்தார்.அவனும்,'அரசே,நான்தூங்கவில்லை.வானில்இருக்கும் நட்சத்திரங்கள் தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'என்றான்.நல்லது என்று கூறிச்சென்ற அரசன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார்.அவன் சொன்னான்,'அரசே,கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.' அரசன் நிம்மதியுடன் படுத்து தூங்கிப் போனான்.காலையில் எழுந்து வந்து பார்த்த போதுவேலையாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப் பார்த்த அரசன் ,''இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?''என்று கேட்டார். அவன் சொன்னான்,'அரசே,உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
............. ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......
............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ........

மூன்று நண்பர்கள் இறந்து மேல் உலகம் சென்றார்கள்.
அங்கே எமதர்மன். அவர்களில் முதலாமவனை அழைத்து
‘நீ சின்ன வயதில் ஒரு பறவையைக் கல்லால் அடித்துக்
கொன்றாய். அதனால் உனக்குத் தண்டனையாக மிக
கோரமான, நோய் பிடித்த பெண்ணை உனக்குத் திருமணம்
செய்து வைக்கிறேன்’ என்றார்.

அடுத்தவனுக்கும் அதே தண்டனை. அதே காரணம்

மூன்றாவது நபருக்கு மட்டும் ஐஸ்வர்யாராய் மாதிரி ஒரு
அழகியைத் திருமணம் செய்து வைத்தார்.

நொந்து போன இரண்டு நண்பர்களும், அவனுக்கு மட்டும்
ஏன் இத்தனை அழகான பெண்? என்று எமனிடம் கேட்டார்கள்.

எமனின் பதில் இதுதான்.
'இந்த கேசுல தண்டனை அந்த பொண்ணுக்கு"

புரிந்தவர்கள் சிரித்துக்கொள்ளலாம்..
............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ........