பத்துக்காடு இது இவ்வூரின் காரண பெயர். பத்துக்காட்டை மையமாகவைத்து சுற்றிலும் காடு என்று முடியும் பத்து ஊர்கள் உள்ளதால் இப்பெயர்வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இருப்பினும் இப்பொழுது கரிசவயல் என்ற பெயரே அரசு பதிவின் படி உள்ளது. வயல் வெளிகளும், தென்னந்தோப்புகளும், இதன் தனிச்சிறப்பு. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் பக்கத்து ஊரான செருபாலகாட்டில் மாட்டு வண்டி , குதிரை வண்டி பந்தயங்கள். மிக பிரசித்தி பெற்றவை. நான் சென்ற முறை ஊர் சென்ற பொழுது எடுத்த பந்தய வீடியோ காட்சிதான் இங்கே....அன்று ஒருநாள் மட்டும் எங்கள் வயல்வெளியின் ஊடே வலைந்து செல்லும் சாலைகளில் மனித தலைகளாகதான் இருக்கும். வெளியூர்களிள் இருந்து வரும் பார்வையாளர்கள் ஆங்காங்கே தென்னந்தோப்புகளில் இளைப்பருவார்கள்............
இது வெளிநாட்டில் வசிக்கும் நம்மவர்கள் காண்பதற்கான ஒரு சிரிய ஏற்பாடு தான்..... ஊரை பற்றிய உங்களது ஆக்கங்கள், புகைபடங்கள், இருந்தாள் எனக்கு அனுப்பி உங்களது ஆக்கங்களையும் இத்தளத்தில் பதியலாம். என் மெயில் முகவரி: big2man007@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக