செவ்வாய், 20 ஜனவரி, 2009

இது தான் வாழ்கை

கடவுள் உயிரினக்களை படைக்க விரும்பி படைத்தவுடன் அதற்கு
வாழ்நாள் மற்றும் சில கட்டளைகளை சொல்லிகொடுக்கின்றான் .............
அது எப்படி ... அதை இப்போது பார்ப்போம் ..!!
முதலில் கழுதையை படைக்கிறான்


படைத்த பிறகு கடவுள் கூறுகிறான் . " உன் பெயர் கழுதை... நீ பொழுது விடிந்ததில் இருந்து பொழுது சாயும் வரை சுமைகளை உன் முதுகில் சுமந்து , சுமை தூக்கியே உழைக்கவேண்டும். நீ... கடினமான பேப்பர் போன்றவைகளை உணவாக உட்கொள்வாய்.. உனக்கு அறிவுத்திறன் குறைவாகவே இருக்கும். நீ ஐம்பது வருடம் உயிரோடு இருப்பாய்.."

உடனே கழுதை சொன்னது. " கடவுளே... என்னை சுமை தூக்கும் க்ழுதையாக படைத்ததை நான் ஒத்துக்கிறேன், ஆனால் ஐம்பது வருடம் ஆயுள் என்பது மிக அதிகம்.... எனக்கு இருபது வருடம் போதும்....... ?" கடவுள் சொன்னான் "அப்படியே ஆகட்டும்"
..........................................................................................................................................................................
கடவுள் நாயை படைத்தான்

கடவுள் கூறினான் . "உன் பெயர் நாய், நீ வீட்டுக்கு காவலாளியாய் எல்லோருக்கும் நன்றி உள்ளதாய் இருப்பாய்.. நீ பிறர் உண்டு மிச்சப்பட்டதையே உன்பாய்..!!. நீ முப்பது வருடம் உயிருடன் இருப்பாய்".

உடனே நாய் சொன்னது, " எனது ஆயுள் முப்பது வருடம் என்பது மிகவும் அதிகம். பதினைந்து வருடமாக குறைத்து தாருங்கள்." கடவுள் " அப்படியே ஆகட்டும்." என்றான்.

..........................................................................................................................................................................

கடவுள் குரங்கை படைத்தான் .


கடவுள் சொன்னான். " உன் பெயர் குரங்கு உன்னால் பிறருக்கு எந்த பயனும் இல்லை. தொந்தரவுகள் தான் இருக்கும். நீ இடம் விட்டு இடம் மாறி வசிப்பாய்..?. உன் ஆயுள் இருபது வருடம்."

குரங்கு கேட்டது "இருபது வருடம் அதிகம் கடவுளே ..! . பத்து வருடம் போதும்". கடவுள். "அப்படியே ஆகட்டும் " என்றார்.


..........................................................................................................................................................................

கடைசியாக கடவுள் மனிதனை படைத்தான்

கடவுள் சொன்னான் " நீ தான் மனிதன். நீ உன் பகுத்தறிவை பயன் படுத்தி அனைத்து உயிரினங்களை விடவும் சிறந்தவனாக விளங்குவாய். நீயே உலகில் அதிகாரம் மிக்கவன். மேழும் உன் வாழ்நாள் இருபது வருடங்கள்."

உடனே மனிதன் சொன்னான்." என்னுடைய கடவுளே..!! . எனக்கு இவ்வளவு சிறப்புகளை கொடுத்து ஆயுள் இருபது வருடம் மிகவும் குறைவு. ஆகவே கழுதை வேண்டாம் என்று விட்ட முப்பது வருடம். நாய் வேண்டாம் என்று சொன்ன பதினைந்து வருடம். குரங்கு கோட்டை விட்ட பத்து வருடம் . அனைத்தயும் எனக்கு கொடுத்துவிடு."

கடவுள் "அப்படியெ ஆகட்டும் என்றார்."

இதனால் தான் மனிதன் பிறந்ததில் இருந்து இருபது வருடம் மனிதனாகவும். கழுதையின் முப்பது வருடத்தை கல்யாணம், பிள்ளைகுட்டிகள் , வேலை, போன்ற அனைத்து குடும்ப சுமைகளையும் தன் முதுகில் சுமக்கிறான்.

பிள்ளைகள் பெரியவர்கள் ஆனவுடன் நாயின் பதினைந்து வருடத்தில். அவர்களுக்கு நன்றி உள்ளவனாகவும். அவர்களின் காவலனாகவும். அவர்கள் கொடுக்கும் மிச்சம் மீதியை தின்று வாழ்கிறான்.

வயதாகி ஓய்வு பெற்றவுடன் குரங்கின் பத்து வருடத்தில். இந்த பிள்ளை வீட்டில் பத்து நாள். அந்த பிள்ளை வீட்டில் பத்து நாள். என்று நிரந்தர வசிப்பிடம் இல்லாமலும். பேரக்குழந்தைகளின் கேலிக்குறிய விளையாட்டு பொருளாகவும் விளங்குகிறான்...

இது தான் வாழ்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக