பேராவூரணி,ஆக. 23: பேராவூரணி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது கணவர் உள்பட 4 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பேராவூரணி அருகேயுள்ள பத்துக்காட்டைச் சேர்ந்தவர் நைனாமுகமது மகன் அஜ்மீர் அலி (28) இவருக்கும், ஈரோடு மாவட்டம், ஐங்கேனிகோரையைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் மகள் வாவாம்மாள் (24) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ரம்ஜானுக்கு சீர் கொடுப்பதற்காக ஈரோட்டிலிருந்து வாவாம்மாளின் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை பத்துக்காடு வந்தனர். அப்போது சீர்வரிசை குறைவாக உள்ளதாகக் கூறி, அஜ்மீர் அலி குடும்பத்தினர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த வாவாம்மாள் திங்கள்கிழமை காலை வீட்டில் தனியாக இருந்த போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்துல் அஜீஸ் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரில் தனது மகள் சாவுக்கு மாமியார் முகமது பீவி மாமனார் நைனாமுகமது, கணவர்அஜ்மீர் அலி, நாத்தனார் நூர்ஜகான் ஆகியோர்தான் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸர் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
நன்றி : தினமணி
செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010
திங்கள், 23 ஆகஸ்ட், 2010
மரண அறிவிப்பு
கரிசவயல் (பத்துக்காடு) நெய்னாமுகமது (வழுக்கமண்டை) அவர்களுடைய இளைய மகன் அஜ்மிருடைய மனைவி வாவாம்மா இன்று அதிகாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது வரதட்டனை கொடுமையால் நடந்திருக்கலாம் என்று போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆறுமாதத்திற்க்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது நமது ஊரிலேயே நடந்திறாத ஒரு சம்பவம் ஆகும். பரக்கத்தினுடைய மாதமான ரமழானில் இப்படி ஒரு சோக நிகழ்வு ஊரையே சோகத்தில் உறைய வைத்திருக்கிறது. பொருத்திருந்து பாப்போம் யார் குற்றவாழி என்று...?. அல்லாஹ் மிகப் பெரியவன்.

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010
இணையம் வழி இஸ்லாமிய பாடத்திட்டம். www.islahme.com
இன்னும் இருவாரங்களில் ஆரம்பமாகவுள்ள ரமழான் மாதத்தை முன்னிட்டு இஸ்லாஹ் என்ற அமைப்பு எதிர்வரும் புனித றமழான் மாதத்தில் முஸ்லிம் மக்களது நன்மை கருதி இணையம் மூலம் பாடத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
முதலாவது நோன்புடன் ஆரம்பமாகும் இக் கற்கை நெறி 24 நாட்களுக்கு 12 பாடங்களைக் கொண்டதாக இருக்குமென அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘அல்குர்ஆனை அணுகும் முறை' என்ற இப்பாடத்திட்டத்திற்கான வழிகாட்டல்களை ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.ஸீ.அகார்முஹம்மத் (நளீமி) நெறிப்படுத்துவார். பாடநெறி முடிவில் சித்தியடைந்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களை என்ற இணையத்தளதில் http://www.islahme.com/ பெறலாம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)