ஞாயிறு, 16 மே, 2010

மரண அறிவிப்பு

கரிசவயல் (பத்துக்காடு). H.கலந்தர்,அபுல் ஹசன், அவர்களுடைய தகப்பனார். சே.ஹபீப் ரஹ்மான் அவர்கள் (16/5/2010) வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"). எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.ஆமீன்.

வியாழன், 13 மே, 2010

குட்டிக்கதைகள்

ஒருவர்:வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.

மற்றவர்: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?

ஒருவர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

மற்றவர்: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.

ஒருவர்: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

மற்றவர்: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

ஒருவர்: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.
மற்றவர்: எப்படிச் சொல்றீங்க?

ஒருவர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பாவும் வித்தியாசம் தெரியாது.!
............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......
............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ........

ஒரு அரசனிடம் சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான்.ஒரு நாள் அரசன் அவனுடன் வெளியூர் சென்றான்.வழியில் இருட்டி விட்டது.எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து, குதிரையைவெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு,வேலைக்காரனிடம்,இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க,அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் தூக்கம் வராது என்றார்.அவனும் சரி என்றான்.சிறிது நேரம் கழித்து அரசர்,அவன் என்ன செய்கிறான் என்பதை சோதிக்க வெளியே வந்தார்.அவனும்,'அரசே,நான்தூங்கவில்லை.வானில்இருக்கும் நட்சத்திரங்கள் தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'என்றான்.நல்லது என்று கூறிச்சென்ற அரசன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார்.அவன் சொன்னான்,'அரசே,கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.' அரசன் நிம்மதியுடன் படுத்து தூங்கிப் போனான்.காலையில் எழுந்து வந்து பார்த்த போதுவேலையாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப் பார்த்த அரசன் ,''இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?''என்று கேட்டார். அவன் சொன்னான்,'அரசே,உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
............. ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......
............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ........

மூன்று நண்பர்கள் இறந்து மேல் உலகம் சென்றார்கள்.
அங்கே எமதர்மன். அவர்களில் முதலாமவனை அழைத்து
‘நீ சின்ன வயதில் ஒரு பறவையைக் கல்லால் அடித்துக்
கொன்றாய். அதனால் உனக்குத் தண்டனையாக மிக
கோரமான, நோய் பிடித்த பெண்ணை உனக்குத் திருமணம்
செய்து வைக்கிறேன்’ என்றார்.

அடுத்தவனுக்கும் அதே தண்டனை. அதே காரணம்

மூன்றாவது நபருக்கு மட்டும் ஐஸ்வர்யாராய் மாதிரி ஒரு
அழகியைத் திருமணம் செய்து வைத்தார்.

நொந்து போன இரண்டு நண்பர்களும், அவனுக்கு மட்டும்
ஏன் இத்தனை அழகான பெண்? என்று எமனிடம் கேட்டார்கள்.

எமனின் பதில் இதுதான்.
'இந்த கேசுல தண்டனை அந்த பொண்ணுக்கு"

புரிந்தவர்கள் சிரித்துக்கொள்ளலாம்..
............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ........