இந்த தலைப்பை வைத்து ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அறிவியலின் துறித வளர்ச்சியுடன் நமது நாகரீகமும் சேர்ந்து வளர்வதால் ஏர்ப்படும் மாற்றங்களில் சில நன்மையை கொடுக்கிறது. சில நம் உடல் நலத்தையே குழி தோண்டிப்புதைக்கிறது. இது வரமா..? சாபமா..?. என்று நினைக்கயில்.... அதிகாலையிலஎந்திரிச்சி கலப்பைய தூக்கிக்கிட்டு வயக்காடு போரதெல்லாம் "அப்போ" . காலையில எந்திரிச்சி காப்பிய குடிச்சிப்புட்டு கட்சிபேச்சி பேசுராங்க "இப்போ" என்ற நாட்டுப்புற பாடல்தான் நினைவுக்கு வரும்.
விஞ்ஞான வளர்ச்சியானது இன்று உலகத்தையே ஒரு பந்துபோல் சுறுக்கிவிட்டது. ஆம் செல்போன் இண்டர்நெட் இன்னும் எத்தனை எத்தனையோ..! கண்டுபிடிப்புகள். உடல் உழைப்பு குறைந்து இன்று கனிப்பொறியின் முன்னே நடைபிணமாய் அமர்ந்திருக்கிறோம்.
அன்று "எரு" விட்டு பயிர் வளர்த்தோம். இன்று "உரம்" வந்தது. அன்று விழைந்த நெல்லை அருத்து, அடித்து, குத்தி, சாப்பிட்டோம். ஆனால் இன்று அத்தனைக்கும் இயந்திரம். அன்று சளிபிடித்தால் துளசிச்சாறு, வயிறு வலித்தால் வேப்பில்லைச்சாறு...!. இன்று அத்தனைக்கும் ஆங்கில மருத்துவம்.
அன்று கேப்பைப் புட்டு சாப்பிட்ட நாம். இன்று பாஸ்ட்புட் சாப்பிடுவதால் தான் நோய்க்கு அடிமையாகி மாத்திரையே உணவாக உட்கொள்கிறோம். எந்த மாற்றம் வந்தால் எதிர்த்திடலாம் எமன் வரவை..!....
இறைவன்படைத்த,
எத்தனை நோய்கள்,