எதற்கு என்று கேட்காதீர்கள்..... உலகின் அனைத்து நிகழ்வுகளுக்கும் நாமும் ஒருவகையில் காரணம். இருப்பவனிடம் இருந்து எடுத்து இல்லாதவனிடம் கொடுக்கும் ராபின் வுட் என்ற களவானியை ஒரு கதாநாயகனாக பார்க்கும் நாம்
ஏன்..? கதநாயகனாக மாறக்கூடாது.
இது என்னடா வம்பாப் போச்சி அப்ப களவாட சொல்றீகளான்னு கேட்காதீர்கள். அது தெருதேங்காயை எடுத்து வழிப் புள்ளயாருக்கு உடைத்த கதை போல் ஆகிவிடும். ஆகவே அதன் கருப்பொருளான இருப்பவன் இல்லாதவன் என்ற கருத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
அதாவது அடுத்தவனை விட நம்மிடம் சற்று கூடுதலாக இருக்கும் பட்சத்தில் நாம் ஏன் அந்த அடுத்தவனுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்யக்கூடாது. தேடித்திரிந்துதான் உதவி செய்யவேண்டும் என்பது இல்லை. ஒவ்வொருவரும் நம்மை சுற்றியுள்ளவர்களை பார்த்துக்கொண்டாளே.! ஒரு தெரு, ஒரு ஊர்,வட்டம், மாவட்டம்,மாநிலம்,நாடு உலகமே , இன்புற்றிருக்கும்.
நாமே கொடுக்க முன்வரும்பொழுது அங்கு ஒரு ராபின்வுட்டுக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. நாம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு உணவுப் பொருட்களை நாம் ஒன்று இருக்கும்போது உப்பில்லை காரமில்லை என்று வீனடித்து கொட்டிவிட்டு இன்னொன்றை சாப்பிடுகிறோம். அந்த உப்பில்லா உணவுகூட இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலையும் எத்தனை மனிதர்கள் செத்து மடிகிறார்கள் தெரியுமா...?.
இதை எழுதும் நான் கடையேழு வள்ளலும் இல்லை உங்களை வள்ளலாக சொல்லவும் இல்லை.
நீ ஒரு கை சோற்றை கொட்டும் முன் இதற்காக ஏங்குபவற்களை மனதில் கொண்டாலே.... பசியால் வாடும் வயிருகலே இல்லை என்ற நிலை வந்துவிடும்.
என்னை பாதித்தது உங்களையும் பாதிக்கட்டுமே....!!
இதற்கு நேர்மாறாக உள்ள சில படங்கள்
இதில் அரபுக்கள் மட்டும்தான் குற்றவாளிகளா..?. அடுத்தவன் பசித்திருக்க நாம் மட்டும் புசித்துவிட்டு மிச்சத்தை வீனடித்தால் நாமும் குற்றவாளிதான்..!
இதில் உள்ள படங்கள் போல் ஆப்ப்ரிக்காவில் மட்டும் மக்கள் பசியால் மடிவதில்லை. நம் நாட்டிலும் தான்.
உதவிக்கு மதம், ஜாதி, மொழி,பார்க்காமல் மனிதநேயத்துடன் நடந்தால் மனுடம் செழிக்கும்.